MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • எச் ராஜா குற்றவாளி என தீர்ப்பு.! இத்தனை மாதங்கள் சிறை தண்டனையா.? வெளியான ஷாக் தகவல்

எச் ராஜா குற்றவாளி என தீர்ப்பு.! இத்தனை மாதங்கள் சிறை தண்டனையா.? வெளியான ஷாக் தகவல்

பெரியார் சிலை மற்றும் கனிமொழி தொடர்பான வழக்கில் எச்.ராஜாவுக்கு இரண்டு வழக்குகளிலும் தலா 6 மாதம் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

2 Min read
Author : Ajmal Khan
| Updated : Dec 02 2024, 12:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

எச் ராஜாவின் சர்ச்சை கருத்து

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் தமிழக ஒருங்கிணைப்பு குழு தலைவராகவும் இருப்பவர் எச். ராஜா, இவர் மீது நீதிமன்றத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில்  கடந்த 2018-ம் ஆண்டு பெரியார் சிலையை தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். அப்போது பெரியார் சிலையை உடைப்பேன் என்று ட்விட்டரில் பதிவு செய்திருந்தார். மேலும்  தி.மு.க துணை பொதுச்செயலாளரும் எம்.பியுமான  கனிமொழிக்கு எதிராக தரக்குறைவாக கருத்து கூறியயதாக காவல்நிலையத்தில் வழக்குகள் பதியப்பட்டது.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
H.raja

H.raja

3 மாதங்களில் வழக்கை முடிக்க உத்தரவு

ஈரோடு நகர்  காவல் நிலையத்தில் அளித்த புகாரில் ராஜாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையை மூன்று மாதங்களில்  முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து இந்த வழக்கு விசாரணை  சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி. ஜெயவேல் முன்பு கடந்த 3 மாதமாக  நடைபெற்றுவந்தது.

 அப்போது கனிமொழிக்கு எதிரான கருத்து அரசியல் ரீதியானது எனவும் பெரியார் சிலை உடைப்பு தொடர்பாக உரிய ஆதாரங்கள் சேகரிக்கப்படவில்லை என எச்.ராஜா தரப்பில் வாதிடப்பட்டது. 

34
<p>kanimozhi and h.raja</p>

<p>kanimozhi and h.raja</p>

எச் ராஜா குற்றவாளி

அதே நேரத்தில் எச்.ராஜாவின் கருத்துக்கு எதிராக ஆதாரங்கள் இருப்பதாக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதனையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை இன்று ஒத்திவைத்தார். இதனையடுத்து இன்று பெரியார் சிலை விவகாரம் மற்றும் கனிமொழிக்கு எதிரான கருத்து தொடர்பான வழக்கில் நீதிபதி ஜெயவேல் தீர்ப்பு வழங்கினார்.  

அப்போது  எச். ராஜா மீதான புகார்களை காவல்துறை தரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்தார். மேலும் குறிப்பிட்ட இரண்டு பதிவுகளும் எச். ராஜாவின் சமூக வலைதள பக்கத்தில் பதியப்பட்டது என உறுதியாகிறது என கூறினார்.

44
h.raja

h.raja

ஓராண்டு சிறை- தண்டனை நிறுத்தம்

எனவே இந்த வழக்குகளில்  எச். ராஜா குற்றவாளி என  சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயவேல் தீர்ப்பு அளித்துள்ளார். இந்த இரண்டு வழக்குகளிலும் தனித்தனியாக 6 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

இந்த தீர்ப்பால் எச்,ராஜா மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில் சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய இருப்பதாக தவகல் வெளியாகியுள்ளது.  இந்த நிலையில் எச் ராஜாவிற்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேல்முறையீடு செய்ய அவகாசம் அளித்து ஓராண்டு சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்தார். 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
பிஜேபி
அரசியல்
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
அதிகாரிகளுக்கு முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு! - எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி
Recommended image2
Now Playing
தவெக அரசை வேண்டுமென்றே நெருக்கடிக்கு உள்ளாக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படவில்லை...
Recommended image3
Now Playing
TVK நிர்வாகி சரத் சர்ச்சை வீடியோ விவகாரம் | வேலூரில் திமுகவினர் அதிரடி போராட்டம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved