MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்! ஒரே வார்த்தையில் சொன்ன முதல்வர் ஸ்டாலின்!

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்! ஒரே வார்த்தையில் சொன்ன முதல்வர் ஸ்டாலின்!

Bihar Elections: பீகார் தேர்தலில் வெற்றி பெற்ற நிதிஷ் குமாருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதேவேளையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை மிகவும் கீழ்நிலைக்கு சென்றுவிட்டதாகவும், நியாயமான தேர்தல்களை நடத்த முன்வர வேண்டும்.

1 Min read
Author : vinoth kumar
| Updated : Nov 15 2025, 10:40 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
பீகார் தேர்தல் முடிவு
Image Credit : Google

பீகார் தேர்தல் முடிவு

பீகாரில் சட்டமன்ற தேர்தலில் 243 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளையும், இந்தியா கூட்டணி 34 தொகுதிகளையும், ஏஐஎம்ஐஎம் கட்சி 5 தொகுதிகளையும், பகுஜன் சமாஜ் கட்சி 1 தொகுதியிலும் வெற்றி பெற்றன. இந்நிலையில் பீகாரில் இந்திய தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை மிகவும் கீழ்நிலைக்கு சென்றுவிட்டது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
முதல்வர் மு.க.ஸ்டாலின்
Image Credit : Asianet News

முதல்வர் மு.க.ஸ்டாலின்

பீகாரில் இந்திய தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை மிகவும் கீழ்நிலைக்கு சென்றுவிட்டது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில்: பெரும் வெற்றியைப் பெற்றுள்ள மூத்த தலைவர் நிதிஷ் குமார் அவர்களுக்கு எனது பாராட்டுகள். பீகார் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அவருக்கு எனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஓயாமல் பரப்புரை மேற்கொண்ட இளந்தலைவர் தேஜஸ்வி யாதவ் அவர்களுக்கும் எனது பாராட்டுகள்.

Related Articles

Related image1
நீங்க ஒன்னும் குற்றவாளி இல்ல! எதுக்கு வழக்கை கண்டு அஞ்சுறீங்க! கே.சி.வீரமணிக்கு அதிர்ச்சி கொடுத்த சுப்ரீம் கோர்ட்!
Related image2
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் ஓவைசி..! 15 தொகுதிகளில் காங்கிரஸ் ஆல் தோற்றோம் என கொக்கரிப்பு!
34
இந்தியா கூட்டணி
Image Credit : Asianet News

இந்தியா கூட்டணி

நலத் திட்ட விநியோகம், சமூக மற்றும் கொள்கைக் கூட்டணிகள், நாம் சொல்ல வேண்டிய அரசியல்ரீதியான செய்தியைத் தெளிவாக மக்களிடம் சொல்வது, இறுதி வாக்கு பதிவாகும் வரை அர்ப்பணிப்புடன் தேர்தல் பணியாற்றுவது எனப் பலவற்றையும் ஒரு தேர்தல் முடிவு பிரதிபலிக்கிறது. இந்தியா கூட்டணியில் உள்ள அனுபவமிக்க தலைவர்கள் இத்தகைய செய்தியை உணரவும், இனி எழும் சவால்களை எதிர்கொள்வதற்கான திட்டங்களை வகுக்கவுமான ஆற்றலைப் பெற்றவர்கள்.

44
தேர்தல் ஆணையம் மீது தாக்கு
Image Credit : X

தேர்தல் ஆணையம் மீது தாக்கு

அதேவேளையில், இத்தேர்தல் முடிவுகள் தேர்தல் ஆணையத்தின் குளறுபடிகளையும் பொறுப்பற்ற செயல்களையும் இல்லாமல் ஆக்கிவிடாது. தேர்தல் ஆணையத்தின் மீதான மரியாதை இதுவரை இல்லாத அளவுக்குக் கீழிறங்கியுள்ளது. வலுவான, நடுநிலையான தேர்தல் ஆணையத்தைக் கோருவது நம் நாட்டு மக்களின் உரிமை. தேர்தலில் வெற்றி பெறாதோரின் நம்பிக்கையையும் பெறும் அளவுக்கு தேர்தல் ஆணையம் நியாயமான முறையில் தேர்தல்களை நடத்திட முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தேர்தல்
பீகார் தேர்தல்
மு. க. ஸ்டாலின்
பிஜேபி
இந்திய தேசிய காங்கிரஸ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
அவ்வளவு தரங்கெட்டவன் நான் இல்லை.. திமுக, அதிமுக கூட்டணிக்கு பேச்சுவார்த்தை.? ரஜினி பரபரப்பு விளக்கம்
Recommended image2
TASMAC: விஜய் ஆட்சியில் டாஸ்மாக்கில் அடுத்த அதிரடி.. இனி இரவு 10 மணிக்கு மேல் போட்டோ அனுப்பணும்!
Recommended image3
Now Playing
தவெக தொண்டர்கள் ஜாக்கிரதையா நடந்துக்கனும்.. ரஜினிகாந்த் பரபரப்பு எச்சரிக்கை
Related Stories
Recommended image1
நீங்க ஒன்னும் குற்றவாளி இல்ல! எதுக்கு வழக்கை கண்டு அஞ்சுறீங்க! கே.சி.வீரமணிக்கு அதிர்ச்சி கொடுத்த சுப்ரீம் கோர்ட்!
Recommended image2
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் ஓவைசி..! 15 தொகுதிகளில் காங்கிரஸ் ஆல் தோற்றோம் என கொக்கரிப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved