- Home
- இந்தியா
- வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் ஓவைசி..! 15 தொகுதிகளில் காங்கிரஸ் ஆல் தோற்றோம் என கொக்கரிப்பு!
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் ஓவைசி..! 15 தொகுதிகளில் காங்கிரஸ் ஆல் தோற்றோம் என கொக்கரிப்பு!
பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சி மதச்சார்பற்ற வாக்குகளைப் பிரித்ததால், தங்கள் கட்சிக்குக் கிடைக்க வேண்டிய சுமார் 15 இடங்களை இழந்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

பீகார் தேர்தல் முடிவுகள்
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் யாரும் எதிர்பாராத வகையில் பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி நான்கில் மூன்று பங்கு இடங்களையும் தாண்டி 202 தொகுதிகளையும், இந்தியா கூட்டணி 34 தொகுதிகளையும், ஏஐஎம்ஐஎம் கட்சி 5 தொகுதிகளையும், பகுஜன் சமாஜ் கட்சி 1 தொகுதியிலும் வெற்றி பெற்றன. குறிப்பாக 61 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வெறும் 6 தொகுதிகளிலும் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
காங்கிரஸ் கட்சியால் 15 இடங்கள் போச்சு
அதேபோல் தனித்து போட்டியிட்ட ஓவைசியின் ஆல் இந்தியா மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்நிலையில் பீகாரில் படுதோல்வியால் நொந்து போயுள்ள காங்கிரஸ் கட்சியை வெறுப்பேற்றும் வகையில் 15 இடங்களில் காங்கிரஸ் கட்சியால் தோற்றோம் என ஓவைசி தெரிவித்துள்ளார்.
ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன்
இந்நிலையில் பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியவுடன் ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி தன்னுடைய கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதாவது காங்கிரஸ் எங்கள் வாக்குகளை பிரித்துவிட்டது. அதனால் தான் எங்களுக்குக் கிடைக்க வேண்டிய வெற்றிச் சீட்டுகள் குறைந்துவிட்டன. இல்லையென்றால் ஏஐஎம்ஐஎம் குறைந்தது 15 இடங்களைப் பெற வாய்ப்பிருந்தது என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மீது கடும் தாக்கு
ஓவைசியின் கூற்றுப்படி, பீகாரில் பல தொகுதிகளில் ஏஐஎம்ஐஎம் குறிப்பிடத்தக்க ஆதரவைப் பெற்றிருந்தது. ஆனால் அதே பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களை நிறுத்தியது, மதச்சார்பற்ற வாக்குகளைப் பிரித்துவிட்டது. எனவே NDAக்கு எதிரான வாக்கு வங்கியில் சிதறலை உருவாக்கி விட்டது. தனது கட்சியின் வளர்ச்சியைப் பார்த்த காங்கிரஸ் மனஅழுத்தத்தில் இவ்வாறு நடந்துகொண்டதாகவும், அது எதிர்க்கட்சிகளுக்கே பாதிப்பை ஏற்படுத்தியதாக ஓவைசி குற்றச்சாட்டியுள்ளார்.
பீகாரில் உயர்ந்து வரும் ஏஐஎம்ஐஎம் செல்வாக்கு
கடந்த சில ஆண்டுகளில், குறிப்பாக முஸ்லிம்–தலித் ஆதரவு அதிகமாக உள்ள பகுதிகளில் ஏஐஎம்ஐஎம் வலுவாக முன்னேறி வருகிறது. பீகாரின் சில கிழக்கு மாவட்டங்களில் ஏஐஎம்ஐஎம் நல்ல ஆதரவைப் பெற்றிருந்தது. எங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் காங்கிரஸ் ‘vote-cutter’ ராஜகியத்தை எடுத்துக்கொண்டதால், வெற்றி வாய்ப்புகளை இழந்ததாக ஓவைசி சுட்டிக்காட்டினார். மேலும் ஏஐஎம்ஐஎம் தன்னுடைய வளர்ச்சிப் பாதையைத் தொடரும் என்று ஓவைசி நம்பிக்கை தெரிவித்துள்ளார். எங்களை ஒருவராலும் தடுக்க முடியாது. எங்களுடைய அரசியல் வளர்ச்சியை மக்கள் தீர்மானிப்பார்கள்; காங்கிரஸ் அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.