- Home
- Tamil Nadu News
- ஸ்டாலின், உதயநிதி உட்பட.. 34 அமைச்சர்களில் 31 பேர் பின்னடைவு.. கலங்கும் திமுகவினர்
ஸ்டாலின், உதயநிதி உட்பட.. 34 அமைச்சர்களில் 31 பேர் பின்னடைவு.. கலங்கும் திமுகவினர்
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் 31 அமைச்சர்கள் ஆரம்ப கட்டத்தில் பின்னடைவை சந்தித்துள்ளனர். இந்த எதிர்பாராத திருப்பம் திமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

31 அமைச்சர்கள் பின்னடைவு
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. மாநிலம் முழுவதும் பதிவான வாக்குகள் 62 மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன. 234 தொகுதிகளில் நடந்த இந்தத் தேர்தலில் சுமார் 85% வாக்குப்பதிவு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் கணக்கிடப்படுகின்றன.
கொளத்தூர்: முதல்வருக்கு சவால்
கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் சுற்று சுற்றில் பின்னடைவை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழக (தவெக) வேட்பாளர் வி.எஸ். பாபு சுமார் ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது திமுக அணியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாநிலம் முழுவதும் தவெக முன்னிலை
தற்போதைய நிலவரப்படி, தவெக பல தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. கட்சி 66 தொகுதிகளில் முதலிடத்தில் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அதே நேரத்தில் திமுக 48 இடங்களில் இரண்டாம் இடத்திலும், அதிமுக 42 இடங்களில் மூன்றாம் இடத்திலும் இருப்பதாக ஆரம்ப கணக்குகள் சுட்டிக்காட்டுகின்றன.
அமைச்சர்கள் பின்னடைவு: கட்சியில் கலக்கம்
திமுக அரசின் அமைச்சர்கள் பலரும் இந்த ஆரம்ப கட்டத்தில் பின்னடைவை சந்தித்துள்ளனர். மொத்தம் 34 அமைச்சர்களில் 31 பேர் பின்னிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் முன்னாள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உட்பட முக்கிய தலைவர்களும் உள்ளனர்.
சேப்பாக்கம் & இரண்டாம் சுற்று நிலவரம்
சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கையிலும் பின்னடைவை சந்தித்துள்ளார். இதனால், முதல்வர் மற்றும் அவரது முக்கிய முகங்கள் இருவரும் ஒரே நேரத்தில் பின்னடைவில் இருப்பது, திமுக ஆதரவாளர்களிடையே பெரும் பரபரப்பையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

