ஜனவரி மாதத்திலும் வடகிழக்கு பருவமழை நீடிப்பது ஏன்.? எந்தெந்த மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.? பாலச்சந்திரன்
தமிழகத்தில் தென் மற்றும் வட மாவட்டங்களில் கன முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் வடகிழக்கு பருவமழை இன்னும் தீவிரமாக இருப்பதாகவும் கூறினார்.
Thoothukudi Rain
மழைக்கான காரணம் என்ன.?
வடதமிழக கடலோரப்பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது மேலும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (08.01.2024) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
Tamil Nadu Rain Update
தென் மற்றும் வட மாவட்டங்களில் மழை
திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
Rain Update Tamil Nadu
கன மழை எச்சரிக்கை
நாளை 09.01.2024: தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
நாளை மறுதினம் (10.01.2024) தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை கனமழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை முன்னறிவிப்பு
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான - கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
chennai rain
வடகிழக்கு பருவமழை நிலவரம் என்ன.?
இதனிடையே வடகிழக்கு பருவமழை டிசம்பர் இறுதியில் நிறைவடையக்கூடிய நிலையில், தற்போது ஜனவரி இரண்டாம் வாரம் வரை தொடர்வது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த சென்னை வானிலைஆய்வு மைய தென் மண்டல் இயக்குனர் பாலசந்திரன், வடகிழக்கு பருவமழை இன்னும் தீவிரமாகவே உள்ளது. இன்னும் 4 முதல் 5 தினங்களுக்கு மழை உள்ளது. மழை நின்று முழுவதுமாக வறண்டால் மட்டுமே வடகிழக்கு பருவமழை முடிந்ததாக அறிவிக்கப்படும்.
TN Rain Update
கடந்த காலங்களில் வடகிழக்கு பருவமழை
கடந்த 4 முதல் 5 வருடங்களாகவே வடகிழக்கு பருவமழை ஜனவரி மாதம் 3முதல் 4வது வாரம் வரை நீடித்துள்ளதாக கூறினார். 2018 ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி வரை மழை நீடித்துள்ளது. 2019ஆண்டில் ஜனவரி 10ஆம் தேதிவரையும், 2020 ஜனவரியில் 19 ஆம் தேதிவரையும், 2021 ஆம் ஆண்டில் ஜனவரி 22ஆம் தேதி வரையும், 2023 ஆம் ஆண்டு 12 ஜனவரி வரையும் வடகிழக்கு பருவமழை நீடித்ததாக பாலசந்திரன் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
புரோ கபடி லீக் ஏலத்தில் கிடைத்த ரூ.31.6 லட்சத்தையும் நன்கொடையாக வழங்க இருக்கிறேன் – மாசான முத்து!