MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • CM Vijay Vs H. Raja: எதற்கு இந்த பொழப்பு.. சட்டமன்றம் ஒன்றும் சினிமா கிடையாது மிஸ்டர் ஜோசஃப் விஜய்.. தவெகவை விளாசிய H.ராஜா!

CM Vijay Vs H. Raja: எதற்கு இந்த பொழப்பு.. சட்டமன்றம் ஒன்றும் சினிமா கிடையாது மிஸ்டர் ஜோசஃப் விஜய்.. தவெகவை விளாசிய H.ராஜா!

Tamilnadu Assembly: சட்டப்பேரவை நேரலை நிறுத்தப்பட்டதை கடுமையாக விமர்சித்துள்ளார். தீர்மானங்களை வாசிப்பதைத் தாண்டி, எதிர்கட்சிகளின் திடீர் கேள்விகளுக்கு பதிலளிக்க முதல்வர் விஜய் திணறுவார் என்ற பயத்தாலேயே நேரலை நிறுத்தப்பட்டதா.

2 Min read
Author : vinoth kumar
Published : Jun 20 2026, 10:57 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : X

தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் அனைத்தும் எவ்வித தடையுமின்றி, முழுமையாக நேரலை செய்யப்படும் என்று தற்போதைய முதல்வர் விஜய் தேர்தல் பிரச்சாரத்தில் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் சட்டமன்றத்தில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது நேரலை திடீரென நிறுத்தப்பட்டது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பேப்பரில் எழுதி வைத்த தீர்மானங்கள் வரை மட்டும் தான் முதல்வரால் ஓரளவு சமாளித்து படிக்க முடியும். மற்றபடி எதிர்கட்சிகள் எழுப்பும் தடாலடி திடீர் கேள்விகளுக்கு தானாக பதிலளிக்க முடியாமல் முதல்வர் திணறுவார் எனும் பயம் காரணமாக இந்த நேரலை நிறுத்தப்பட்டதா? என எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Image Credit : our own

இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வெளியிட்டுள்ள பதிவில்: எங்களது ஆட்சியில் சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் முழுவதையும் மக்கள் அனைவரும் காணும்படியாக நேரலை செய்வோம்…நாங்கள் அவ்வளவு வெளிப்படையாக்கும்’ என தற்பெருமை பேசி வந்த தவெக அரசு மேகதாது அணை விவகாரத்தில் முதல்வர் ஜோசஃப் விஜய் தனித்தீர்மானம் கொண்டு வந்து அதன் மீது எதிர்கட்சிகளின் தலைவர்கள் பேசுவது வரை மட்டுமே நேரலை செய்தார்கள். அதன் பிறகு ஆளுநர் உரை மீதான விவாதங்கள் நடக்கத் துவங்கியதும் நேரலை நிறுத்தப்பட்டது.

Ration Card: ஜூன் 20-க்குள் இதை செய்யவில்லை என்றால் ரேஷன் பொருட்கள் கட்? மக்களே உடனே கடைக்கு போங்க!

Related Articles

Related image1
Tamilnadu Government Jobs: பெண்களுக்கு குட்நியூஸ்.. மாதம் ரூ.20,000 சம்பளத்தில் வேலை.. சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!
Related image2
TN Power Cut: சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை.. தமிழகம் முழுவதும் மின்தடை.. லிஸ்ட்டில் உங்க ஊர் இருக்கா?
34
Image Credit : Asianet News

பேப்பரில் எழுதி வைத்த தீர்மானங்கள் வரை மட்டும் தான் முதல்வரால் ஓரளவு சமாளித்து படிக்க முடியும்… மற்றபடி எதிர்கட்சிகள் எழுப்பும் தடாலடி திடீர் கேள்விகளுக்கு தானாக பதிலளிக்க முடியாமல் முதல்வர் திணறுவார் எனும் பயம் காரணமாக இந்த நேரலை நிறுத்தப்பட்டதா? மக்கள் காண முடியா விட்டாலும் சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் முதல்வரின் திணறலும், தட்டுத்தடுமாற்றங்களும் வெளி வரத்தானே செய்யும்? கத்திரிக்காய் முத்தினால கடைக்கு வந்தே தீரும் என்பது போல சட்டமன்றத்தில் நடப்பவற்றை முதல்வர் இரும்புத்திரையே போட்டு மறைத்தாலும் ஜனநாயகத்தில் அவை அன்றே வெளி வந்து விடும். அப்புறம் எதற்கு இந்த ரகசிய செட்டிங் எல்லாம்?

44
Image Credit : ANI

ஆஹா முதல்வர்…ஒஹோ முதல்வர் எனும் பிம்பங்களை கட்டமைத்து மட்டுமே ஒரு அரசாங்கத்தை ஆக்கபூர்வமாக நடத்தி விட முடியாது. அவ்வப்போது மட்டுமே வசனங்களை படித்து ஒப்பிக்க சட்டமன்றம் ஒன்றும் சினிமா காட்சி கிடையாது. அன்றாடம் மக்களை, அவர் தம் உணர்வுகளை, சுற்றிலும் நடக்கும் செய்திகளை, இடித்துரைக்கும் எதிர்கட்சிகளை உற்று கவனிக்க வேண்டும். உன்னிப்பாய் ஆழ்ந்து சகலமும் படிக்க வேண்டும். அப்போது மட்டும் தான் வலுவாக ஆட்சி செய்ய முடியும். எனவே சமாளிப்புகளை தவிர்த்து நிஜமான உள்ளுணர்வோடு உங்களை நிருபித்து ஆட்சி செய்யுங்கள். இல்லையெனில் நீங்களும் சென்ற ஆட்சியைப் போலவே தமிழகம் காணும் மற்றும் ஒரு பொம்மை முதல்வரே என எச்.ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசியல்
டிவி.கே. விஜய்
பிஜேபி
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
School Holidays: பள்ளிகளுக்கு அடுத்த வாரம் 3 நாட்கள் தொடர் விடுமுறை.. மாணவர்கள் குஷியோ குஷி!
Recommended image2
TN Rain Alert: குடை ரெடியா மக்களே! இன்று 5 மாவட்டங்களில் அண்டா அண்டாவா கொட்டப்போகும் கனமழை!
Recommended image3
Dowry Abuse: படுக்கை அறை முதல் பாத்ரூம் வரை கேமரா.. கொடூர டாக்டர் கணவன்.! திருமணமான 48வது நாளில் விசாகா விபரீத முடிவு.!
Related Stories
Recommended image1
Tamilnadu Government Jobs: பெண்களுக்கு குட்நியூஸ்.. மாதம் ரூ.20,000 சம்பளத்தில் வேலை.. சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!
Recommended image2
TN Power Cut: சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை.. தமிழகம் முழுவதும் மின்தடை.. லிஸ்ட்டில் உங்க ஊர் இருக்கா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved