ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! தமிழக அரசுக்கு அதிர்ச்சி கொடுத்த உச்சநீதிமன்றம்!
Armstrong Murder Case: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இந்த உத்தரவை எதிர்த்த தமிழக அரசின் மேல்முறையீட்டை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5ம் தேதி அவருடைய புதிய வீட்டின் அருகே மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 25க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ரவுடி திருவேங்கடம் மட்டும் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். மேலும் சம்போ செந்தில் மற்றும் மொட்டை கிருஷ்ணன் ஆகிய 2 பேர் வெளிநாட்டில் தலைமறைவாகி உள்ளதால், அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சிபிஐ விசாரணை
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மீது செம்பியம் போலீசார் 5000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது. இதனிடையே இந்த வழக்கை போலீசார் முறையாக விசாரிக்கவில்லை எனக்கூறி ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் கீனோஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்தன்னை உயர்நீதிமன்றம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்து கடந்த மாதம் 24ம் தேதி உத்தரவிட்டது.
தமிழக அரசு
இந்த உத்தரவுக்கு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி வழக்கை ரத்து செய்யக் கோரியும் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மேல்முறையீட்டு மனுவில் சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். தமிழக காவல்துறை விசாரணை நடத்தி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் வழக்கின் விசாரணையை வேறு அமர்வுக்கு மாற்றுவதால் தேவையற்ற காலதாமதம் ஏற்படும்.
உச்சநீதிமன்றம்
எனவே இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தனர். இந்த மனு நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி, என்.வி அஞ்சரியா ஆகியோர் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க தடை இல்லை என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.