- Home
- Tamil Nadu News
- 3644 காவலர் பணியிடங்கள் நிரப்பப்போறாங்க.! தகுதி என்ன.? விண்ணப்பிக்க கடைசி நாள் எப்போது.?
3644 காவலர் பணியிடங்கள் நிரப்பப்போறாங்க.! தகுதி என்ன.? விண்ணப்பிக்க கடைசி நாள் எப்போது.?
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் 3644 காவலர், சிறைக்காவலர், மற்றும் தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 21 வரை கால அவகாசம் உள்ளது. எழுத்துத் தேர்வு நவம்பர் 9 அன்று நடைபெறும்.

3644 காவலர் காலிப்பணியிடம் தேர்வு அறிவிப்பு
காவல்துறையின் பணியானது முக்கியமானது ஆனால் தமிழகத்தில் பல இடங்களில் ஏராளமான காலிப்பணியிடம் இருப்பதாக தகவல் வெளியானது. இதனை நிரப்பிடும் வகைஇல் இந்த நிலையில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பாக 3644 இரண்டாம் நிலை காவலர் இரண்டாம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான பொதுத் தேர்வுக்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து இணைய வழியில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று முதல் காவலர்கள் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இணையவழியில் விண்ணப்பிக்க கடைசி தேதியாக செப்டம்பர் 21ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
காவலர் தேர்வு- விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்
மேலும் இணைய வழி விண்ணப்பம் சமர்ப்பித்த பின்னர் திருத்தம் செய்வதற்கான கடைசி தேதியாக செப்டம்பர் 25ஆம் தேதி தெரிவிக்கப்பட்டுள்ளது. எழுத்து தேர்வு நடைபெறும் தேதி நவம்பர் 9ஆம் தேதி என அந்த அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த காளி பணியிடங்களை பொருத்தவரை 3644 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல் துறை இரண்டாம் நிலை காவலர்களுக்கு மொத்தம் 2833 பணியிடங்களும், சிறை மற்றும் சீர்திருத்த துறை இரண்டாம் நிலை சிறைக் காவலர்கள் 180 இடங்களும், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் தீயணைப்பாளர் பணிக்கு 631 இடங்களும் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவலர் தேர்வு- இட ஒதுக்கீடு என்ன.?
மேலும் வாரிசுதாரர்களுக்கான இட ஒதுக்கீடு, விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீடு, முன்னாள் ராணுவ வீரர்களுக்கான இட ஒதுக்கீடு, ஆதரவற்ற விதவைகளுக்கான இட ஒதுக்கீடு, தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான முன்னுரிமை ஆகியவை தொடர்பான இட ஒதுக்கீடு சதவீதமும் வெளியிடப்பட்டுள்ளது. தற்போதுள்ள விதிகளின்படி வகுப்புவாரி இட ஒதுக்கீட்டின் கீழ் சதவிகிதம் அனைத்து பதவிகளுக்கும் பொருந்தும்
மேலும் பல்வேறு பிரிவுகளை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கான இட ஒதுக்கீட்டு விவரங்கள் விரிவான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வகுப்புவாரி ஒதுக்கீடு: தற்போதுள்ள விதிகளின்படி வகுப்புவாரி இடஒதுக்கீட்டின் சதவீதம், (மெச்சத்தக்க விளையாட்டு வீரர்களுக்கான 3% ஒதுக்கீட்டை தவிர) அனைத்து பதவிகளுக்கும் பொருந்தும். பல்வேறு பிரிவுகளை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கான இடஒதுக்கீட்டு விவரங்கள் விரிவான அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் என்ன.? கல்வி தகுதி என்ன.?
காவலர்களுக்கான ஊதிய விகிதமும் அறிவிக்கப்பட்டுள்ளது அந்த வகையில் 18,200 இல் இருந்து 67 ஆயிரத்து 100 ரூபாய் வரை வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- குறைந்தபட்ச கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- வயது வரம்பு (01.07.2025-ன் படி): 18 வயது நிறைவுற்றவராகவும் மற்றும் 26 வயது நிறைவடையாதவராகவும் இருத்தல் வேண்டும்.
(விண்ணப்பதாரர்களின் வயது உச்சவரம்பு வகுப்பு /பிரிவுகளுக்கு தக்கவாறு மாறுபடும்).
குறிப்பு : விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கும், மேற்கொண்டு தகவல் அறிவதற்கும் இவ்வாரியத்தின் www.tnusrb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விரிவான அறிவிக்கையை பார்வையிடும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.