- Home
- Tamil Nadu News
- அதிமுக ஆட்சியை 10 நாட்களில் கலைத்து விட்டு பாஜகவை சேர்ந்தவர் முதலமைச்சராக்கிவிடுவார்கள்- அன்வர் ராஜா
அதிமுக ஆட்சியை 10 நாட்களில் கலைத்து விட்டு பாஜகவை சேர்ந்தவர் முதலமைச்சராக்கிவிடுவார்கள்- அன்வர் ராஜா
அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா திமுகவில் இணைந்தார். பாஜக அதிமுகவை அழிக்க நினைப்பதாகவும், எடப்பாடி பழனிசாமி தனது கருத்துக்களுக்கு செவிசாய்க்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

திமுகவில் இணைந்த அனவர் ராஜா
அதிமுக முன்னாள் அமைச்சரும், மூத்த நிர்வாகியுமான அன்வர் ராஜா அதிமுகவில் இருந்து விலகி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அன்வர் ராஜா, கருத்தியல் ரீதியாக நாங்கள் எல்லாம் பேரறிஞர் அண்ணாவின் தலைமையில் அதற்கு பின்னர் வந்த தலைவர்களின் தலைமையில் கருத்தியல் ரீதியாக நாங்கள் எல்லாம் வாழ்ந்தவர்கள். தனது கொள்கையில் இருந்து தடம் புரண்டு அதிமுக இப்போது பாஜகவின் கையில் சிக்கி இருக்கிறது.
அமித்ஷா தெளிவாக சொல்லிவிட்டார். NDA கூட்டணி ஆட்சி தான் அதில் பாஜகவும் இடம் பெறும் என சொல்லிவிட்டார் ஒரு இடத்தில் மட்டுமல்ல மூன்று இடத்தில் பேட்டி அளித்திருக்கிறார்.அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி அவர்களது பெயரை இவர் தான் முதலமைச்சர் வேட்பாளர் என அமித்ஷா எங்கேயும் குறிப்பிடவில்லை. தமிழகத்தில் 10 நாட்கள் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பிரச்சாரத்தை செய்து கொண்டு வருகிறார்.
முதலமைச்சர் வேட்பாளர் யார்.?
பத்து நாளும் அவர் என்ன முயற்சித்து வருகிறார் என்றால் தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன சொல்ல வருகிறார் என்றால் நான் தான் அதிமுகவின் வேட்பாளர் என உறுதிப்படுத்தவே அவரால் முடியவில்லை என கூறினார். அதிமுக வெற்றி பெற்றால் நான் தான் முதலமைச்சர் வேட்பாளர் என அவரால் சொல்ல முடியவில்லை அந்த அளவுக்கு தான் அதன் நிலைமை உள்ளது. அதையே அவரால் இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை என கூறினார்.
எந்தக் கட்சியில் சேர்ந்தாலும் அந்த கட்சியை அழிப்பது தான் அவர்களின் நோக்கம் அதிமுகவை அழித்துவிட்டு அதன் பிறகு திமுகவுடன் Fight செய்ய வேண்டும் என அர்ஜெண்ட Agenda அதைத்தான் அவர்கள் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆட்சியில் பங்கு கொடுப்பவருக்கு நாங்கள் ஏமாளி அல்ல என நேற்றைய தினம் பேசி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி இது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரியவில்லை. அதிமுக கூட்டணி வென்று ஆட்சி அமைத்தாலும் 10 நாட்களில் ஆட்சியை கலைத்துவிட்டு பாஜகலைவ் சேர்ந்தவர் முதலமைச்சராகிடுவார்.
அதிமுக ஆட்சியை 10 நாளில் கலைத்துவிடும் பாஜக
பாஜகவை பொறுத்தவரை தமிழ்நாட்டில் அது ஒரு Negative Force அதனை மக்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவே எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன் கட்சியை காப்பாற்ற வேண்டும் என மனதில் ஆதங்கத்தை எல்லாம் சொல்லிப் பார்த்தேன். அதை எல்லாம் கேட்பதற்கு தயாராக இல்லை. எனவே தான் வேறு வழி இல்லாமல் அங்கிருந்து அடுத்த என்னுடைய Choice அடுத்த Option ஒரே Option திமுக தான் என தெரிவித்தார்.
2026 தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பது பாஜகவின் நோக்கமல்ல. அதிமுகவை அழிப்பதை பாஜக நோக்கம். அதிமுகவை அழித்துவிட்டு திமுகவுடன் நேரடியாக மோத வேண்டும் என்பதுதான் பாஜகவின் அஜெண்டா என்றார்.
மன வருத்தத்தில் அதிமுக தலைவர்கள்
அதிமுகவில் அதிருப்தியில் உள்ள மூத்த தலைவர்களை திமுகவிற்கு அழைக்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு அவரவர்களுக்கு தெரியும் எல்லோரும் மன வருத்தத்தில் தான் இருக்கிறார்கள். பாஜக அதிமுகவை அழித்துவிடும் அது எல்லோருக்கும் தெரியும். இன்று வரை கூட்டணி என்று சொல்கிறார்களே தவிர கூட்டணிக்கே தலைமை தாங்குவது எடப்பாடி என அமிர்ஷா கூறினாரே தவிர முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி தான் என்று அமித்ஷா ஒரு இடத்தில் கூட சொல்லவில்லை என தெரிவித்தார்.
நிர்வாகிகளின் பேச்சை கேட்காத எடப்பாடி
உங்கள் கருத்தை உதாசீனப்படுத்தினாரா எடப்பாடி பழனிசாமி என்ற கேள்விக்கு கேட்க மாட்டார் என் பேச்சை மட்டும் அல்ல, 7 முன்னாள் அமைச்சர்கள் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்து அதிமுகவில் ஒற்றுமை வேண்டும்,
மீண்டும் உயிர் பெற்று எழ வேண்டுமானால் அதற்கு சில யுக்திகளையும் கடைபிடிக்க வேண்டும் என சொன்னார்கள் மூன்று மணி நேரம் அவரது இல்லத்தில் நடைபெற்றது. அந்த வாதத்தில் கலந்துகொண்ட அமைச்சரே என்னிடம் சொன்னார். கடைசி வரை எடப்பாடி அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை வேறு வழியில்லை என விட்டு விட்டார்கள் அவர் எதையும் ஏற்றுக்கொள்ள மாட்டார் என அன்வர் ராஜா தெரிவித்தார்.