MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • வார விடுமுறை.! எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை

வார விடுமுறை.! எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை

கோடை வெயிலின் தாக்கத்தால் அதிகரித்து வரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, வார விடுமுறை மற்றும் முகூர்த்த நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்புப் பேருந்துகளை இயக்க உள்ளது. 

2 Min read
Author : Ajmal Khan
| Updated : May 14 2025, 03:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
கோடை வெயிலுக்கு சுற்றுலா
Image Credit : Social Media

கோடை வெயிலுக்கு சுற்றுலா

கோடை வெயிலின் தாக்கத்தின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக குளுமையான இடங்களுக்கு சுற்றுலாவிற்கு செல்ல தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் பெரும்பாலான ரயில்கள் முன் பதிவு முடிவடைந்து விட்டது. கூட்ட நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. எனவே தனியார் பேருந்துகளில் பயணிக்கலாம் என பார்த்தால் அதிகளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் வார விடுமுறை மற்றும் முகூர்த்த நாளையொட்டி சிறப்பு பேருந்துகளுக்கான அறிவிப்பை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது.

25
வார விடுமுறை, முகூர்த்த நாள் சிறப்பு பேருந்து
Image Credit : our own

வார விடுமுறை, முகூர்த்த நாள் சிறப்பு பேருந்து

இதன் படி, 16/05/2025 (வெள்ளிக்கிழமை) முகூர்த்தம் 17/05/2025 (சனிக்கிழமை) மற்றும் 18/05/2025 (ஞாயிறுக் கிழமை) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும், இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
Summer Tips : ஏசி இல்லாமல் வீட்டை குளுகுளுன்னு வைக்க யாரும் சொல்லாத சூப்பர் டிப்ஸ்!
Related image2
MINI BUS : மீண்டும் மினி பஸ்.! சென்னையில் எந்த எந்த பகுதிகளுக்கு தெரியுமா.? வெளியான முக்கிய அறிவிப்பு
35
தமிழகத்தில் சிறப்பு பேருந்து அறிவிப்பு
Image Credit : our own

தமிழகத்தில் சிறப்பு பேருந்து அறிவிப்பு

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 16/05/2025 (வெள்ளிக்கிழமை) அன்று 570 பேருந்துகளும், 17/05/2025 (சனிக்கிழமை) 605 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதாவரத்திலிருந்து 16/05/2025 அன்று 24 பேருந்துகளும், 

17/05/2025 அன்று 100 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 16/05/2025 வெள்ளிக் கிழமை அன்று 100 பேருந்துகளும், 17/05/2025 சனிக்கிழமை அன்று 90 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது

45
தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்து இயக்கம்
Image Credit : our own

தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்து இயக்கம்

பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 250 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

55
முன்பதிவு செய்து பயணிக்க அறிவுறுத்தல்
Image Credit : our own

முன்பதிவு செய்து பயணிக்க அறிவுறுத்தல்

இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 10,817 பயணிகளும், சனிக்கிழமை 6,721 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 10,623 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
விடுமுறைக்கால சிறப்பு பேருந்து
தமிழ்நாடு
தமிழ்நாடு அரசு பேருந்து
விடுமுறை
கோடைக்காலம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
மெட்ரோ ரயில்களில் நாளை இலவசமாக பயணிக்கலாம்.. சூப்பர் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே!
Recommended image2
ரொம்ப பந்தா பண்ணும் இபிஎஸ்.. மற்றொரு புறம் புலம்புகிறார்.. அமைச்சர் கீதா ஜீவன் விளாசல்
Recommended image3
Now Playing
நல்லகண்ணுக்கு பாரத் ரத்னா விருதை வழங்க வேண்டும் - தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை
Related Stories
Recommended image1
Summer Tips : ஏசி இல்லாமல் வீட்டை குளுகுளுன்னு வைக்க யாரும் சொல்லாத சூப்பர் டிப்ஸ்!
Recommended image2
MINI BUS : மீண்டும் மினி பஸ்.! சென்னையில் எந்த எந்த பகுதிகளுக்கு தெரியுமா.? வெளியான முக்கிய அறிவிப்பு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved