MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • MINI BUS : மீண்டும் மினி பஸ்.! சென்னையில் எந்த எந்த பகுதிகளுக்கு தெரியுமா.? வெளியான முக்கிய அறிவிப்பு

MINI BUS : மீண்டும் மினி பஸ்.! சென்னையில் எந்த எந்த பகுதிகளுக்கு தெரியுமா.? வெளியான முக்கிய அறிவிப்பு

குறுகிய சாலைகள், தெருக்களில் மினி பஸ்கள் இயக்கும் வகையில் ஒருங்கிணைந்த மினி பஸ் திட்ட வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி சென்னையில் எந்த எந்த பகுதிகளில் மின் பேருந்து சேவை தொடங்கப்படும் என அறிவித்துள்ளது.  

2 Min read
Author : Ajmal Khan
Published : Jun 18 2024, 09:46 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

மீண்டும் மினி பேருந்து

பேருந்துகள் சேவை தமிழகம் முழுவதும் இயக்கப்பட்டு வந்தாலும், குறுகிய தெருக்கள், ஊர்களுக்குள் பேருந்துகள் சேவை இல்லாத நிலை நீடித்தது. இதன் காரணமாக மக்கள் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக மினி பஸ்களுக்கான அனுமதி வழங்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது அனுமதி வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி, ஒருங்கிணைந்த மினி பஸ் திட்ட வரைவு அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.  தமிழகம் முழுவதும் மினி பஸ்களை இயங்குவதற்கான அனுமதி வழங்கப்படவுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25

சென்னையில் எந்த பகுதியில் மினி பஸ்

சென்னையை பொறுத்த திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குட, சோளிங்கநல்லூர் ஆகிய பகுதிகளுக்கு மினி பஸ் சேவை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில், தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், அண்ணா நகர்,தேனாம்பேட்டை,கோடம்பாக்கம், அடையார் ஆகிய பகுதிகளுக்கு மினி பஸ் சேவை வழித்தடம் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

DMK : அமைச்சர் மஸ்தானின் கட்சி பதவி பறிப்பால் உருவான சிக்கல்.! அதிரடியாக புதிய அறிவிப்பு வெளியிட்ட திமுக தலைமை

35

எத்தனை கிலோ மீட்டர் மினி பேருந்து இயக்கம்.?

தமிழகம் முழுவதும் எந்தெந்த வழித்தடத்தில் மினி பஸ் சேவைகளுக்கு அனுமதி வழங்குவது மற்றும் எவ்வளவு பேருந்துகளுக்கு அனுமதி வழங்குவது என்பதை ஆர்டிஓக்கள் முடிவு செய்வார்கள் எனவும், அதிகபட்சமாக 25 கிலோ மீட்டர் தூரம் வரை மினி பஸ்களை இயக்க அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 18 கிலோ மீட்டர்  சேவை இல்லாத வழித்தடத்திலும் 8 கிலோமீட்டர் சேவை உள்ள வழித்தடத்திலும் அனுமதி வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. 

45

25 பேர் பயணம் செய்ய வசதி

ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இல்லாமல் ஒரு மினி பேருந்தில் அதிகபட்சமாக 25 பேர் பயணம் செய்யும் வகையில் இருக்கை வசதி இருக்கலாம். அனைத்து மினி பஸ்களின் ஜிபிஎஸ் வசதி பொருத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்த வரைவு அறிக்கை தொடர்பாக பொதுமக்கள் தங்களது கருத்துக்களை 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என்றும்,  இதன்படி ஜூலை 14ஆம் தேதிக்குள் பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என கேட்டக்கொள்ளப்பட்டுள்ளது.

55

கருத்து கேட்பு கூட்டம்

மேலும் இது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் ஜூலை 22ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் உள்துறை முதன்மை செயலாளர் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே கருத்து கேட்பு கூட்டம் முடிவடைந்து ஒரு சில மாதங்களில் மினி பேருந்துகள் இயக்கப்படும் என கூறப்படுகிறது.

சென்னையில் இரவில் கொட்டித்தீர்த்த கன மழை.! இன்று எந்த எந்த மாவட்டங்களில் மழை பெய்யும்.? வானிலை மையம் அலர்ட் 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
திமுக

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
ஓட்டு போட்ட நீங்கள் தான் ஆட்சி ஒழுங்காக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்! கமல்ஹாசன் அதிரடி
Recommended image2
Now Playing
TN Rain Update: வெயிலுக்கு குட்பை! தமிழகத்தில் ருத்ரதாண்டவம் ஆடப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்கள்?
Recommended image3
TN Rain Update: வெயிலுக்கு குட்பை! தமிழகத்தில் ருத்ரதாண்டவம் ஆடப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்கள்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved