MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • DMK : அமைச்சர் மஸ்தானின் கட்சி பதவி பறிப்பால் உருவான சிக்கல்.! அதிரடியாக புதிய அறிவிப்பு வெளியிட்ட திமுக தலைமை

DMK : அமைச்சர் மஸ்தானின் கட்சி பதவி பறிப்பால் உருவான சிக்கல்.! அதிரடியாக புதிய அறிவிப்பு வெளியிட்ட திமுக தலைமை

அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் இருந்த மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டது விமர்சிக்கப்பட்ட நிலையில், தற்போது விழுப்புரம் வடக்கு மாவட்ட அவைத்தலைவராக செஞ்சி மஸ்தான் நியமிக்கப்படுவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.  

2 Min read
Author : Ajmal Khan
Published : Jun 18 2024, 09:08 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

மஸ்தான் பதவி பறிப்பு

அமைச்சர் பதவியில் இருந்த நாசர் ஏற்கனவே நீக்கப்பட்டது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது விழுப்புரம் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளராகப் பணியாற்றி வந்த அமைச்சர்  செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக டாக்டர் ப.சேகர் விழுப்புரம் வடக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25

சிறுபான்மையினர் புறக்கணிப்பு.?

இந்த அறிவிப்பால் சிறுபான்மையினர் திமுகவில் புறக்கணிக்கப்பட்டு வருவதாக விமர்சிக்கப்பட்டு வந்தது. குறிப்பாக தமிழகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களின் வாக்குகளால் திமுகவால் வெற்றி பெற முடிந்ததாகவும், ஆனால் திமுகவில் இஸ்லாமியர்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லையெனவும் தொடர்ந்து புகார் தெரிவிக்கப்பட்டு வந்தது.

35
<p>ks masthan</p>

<p>ks masthan</p>

அவைத்தலைவர் தேர்தல்

தற்போது நடைபெற்ற முடிவடைந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட திமுக சார்பாக ஒரு இஸ்லாமியருக்கு கூட வாய்ப்பு வழங்கவில்லையென்றும், கட்சியிலும் தலைமை பொறுப்பில் இஸ்லாமியர்கள் வாய்ப்பு மறுக்கப்படுவதாக இஸ்லாமிய அமைப்புகள் தெரிவித்து வந்தது. இந்த சூழ்நிலையில்,  

திமுக வெளியிட்டுள்ள அறிவிப்பில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் 15வது பொதுத் தேர்தலில், விழுப்புரம் வடக்கு மாவட்ட அவைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் ப.சேகர் அவர்கள் மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட காரணத்தால்,

45
ks masthan

ks masthan

மஸ்தான் விருப்பு மனு

விழுப்புரம் வடக்கு மாவட்டம், மாவட்ட அவைத்தலைவர் பொறுப்புக்கான தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, இப்பொறுப்புக்கு போட்டியிடுவோர் அதற்கென உள்ள படிவத்தில் முறைப்படி பூர்த்தி செய்து 2024, ஜூன் 17 (திங்கட்கிழமை) அன்று ரூ.25000/வீதம் தலைமைக் கழகத்தில் அளித்து இரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். "என தலைமைக் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

DMK : அமைச்சர் செஞ்சி மஸ்தான் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து திடீர் நீக்கம்.! - காரணம் என்ன தெரியுமா.?
 

55

அவைத்தலைவராக மஸ்தான் நியமனம்

இதில், விழுப்புரம் வடக்கு மாவட்டம், மாவட்ட அவைத்தலைவர் பொறுப்புக்கு செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்த காரணத்தால், அவரது மனு ஏற்கப்பட்டு, விழுப்புரம் வடக்கு மாவட்டம், மாவட்ட அவைத்தலைவராக, திரு.செஞ்சி கே.எஸ்.மஸ்தான், தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 
 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Crop Loan: பயிர்க்கடன் தள்ளுபடி வந்தாச்சு..! யாருக்கு எவ்வளவு கிடைக்கும்? முழு லிஸ்ட் இதோ!
Recommended image2
AIADMK: நேற்று 3.. இன்று 5 .. அதிமுகவில் அடுத்து ராஜினாமா செய்யப்போகும் எம்எல்ஏக்கள் யார் தெரியுமா? அதிர்ச்சியில் இபிஎஸ்!
Recommended image3
Tamil Nadu Special Buses : பக்ரீத் தொடர் விடுமுறைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved