எடுத்த சபதம் நிறைவேறாமல் காலணி அணிந்து கொண்ட அண்ணாமலை!
Annamalai put on footwear before fulfilling the vow : தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் வேண்டுகோளுக்கிணங்க 3 மாதங்களுக்கு பிறகு அண்ணாமலை காலணி அணிந்து கொண்டார்.

Annamalai Wear Footwear
Annamalai put on footwear before fulfilling the vow :தமிழக அரசியல் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில், அதிமுக மற்றும் பாஜக கட்சி இணைந்து தேர்தலை சந்திக்க இருக்கிறது. இதுஒரு புறம் இருந்தாலும் தமிழக பாஜக மாநில தலைவராக இருந்த அண்ணாமலையின் பதவிக்காலம் முடிந்த நிலையில், புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
Annamalai Wear Footwear
இன்று சென்னை வானகரத்தில் நடைபெற்ற தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் நயினார் நாகேந்திரன் தமிழக பாஜக மாநில தலைவராக பதவி ஏற்றுக் கொண்டார். இதையடுத்து அண்ணாமலை பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டார்.
Annamalai Wear Footwear
இந்த நிலையில் தான் தமிழக பாஜக மாநில புதிய தலைவராக பொறுப்பேற்ற நயினார் நாகேந்திரன் தனது முதல் செயல்பாடாக அண்ணாமலைக்காக புதிய காலணியை கொடுத்து அவரை அணியச் செய்துள்ளார். வரும் 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடக்கும். அது உறுதி. ஆதலால், அண்ணாமலையை காலணி அணிய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதன்படி அவரது கோரிக்கையையும் ஏற்று அண்ணாமலையும் காலணி அணிந்து கொண்டார்.
Annamalai Wear Footwear
இதுதான் இப்போது தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், திமுக அரசியை விரட்டியடிக்கும் வரையில் தான் காலில் காலணி அணியமாட்டேன் என்று சபதம் எடுத்திருந்தார். சென்னையில் உள்ள கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து வன்மையாக கண்டித்த அண்ணாமலை அப்போது தனது வீட்டு முன்பு 6 முறை சாட்டையடி போராட்டம் நடத்தினார். மேலும், திமுக ஆட்சியை விரட்டியடிக்கும் வரையில் தான் காலில் காலணி அணியமாட்டேன் என்று சபதம் எடுத்தார்.
Annamalai Wear Footwear
ஆனால், இன்னும் திமுக அரசி ஆட்சியில் இருக்கும் நிலையில் அண்ணாமலை தனது சபதத்தை நிறைவேற்றாத நிலையில் எப்படி காலில் காலணி அணிந்து கொண்டார் என்ற கேள்வியும் எழுகிறது. அதற்கு புதிதாக தமிழக பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட நயினார் நாகேந்திரன் தான் காரணமாக சொல்லப்படுகிறது. அவரது வேண்டுகோளுக்கிணங்க தான் அண்ணாமலை காலில் காலணி அணிந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.