- Home
- Tamil Nadu News
- கருணாநிதி சமாதியில் கோவில் கோபுரம்: சர்ச்சையைக் கிளப்பும் அலங்காரம்- சீறும் அண்ணாமலை
கருணாநிதி சமாதியில் கோவில் கோபுரம்: சர்ச்சையைக் கிளப்பும் அலங்காரம்- சீறும் அண்ணாமலை
தமிழக சட்டப்பேரவையில் அறநிலையத்துறை மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்படும் நிலையில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சமாதி கோவில் கோபுரம் போல அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

sekar babu
Karunanidhi memorial temple tower decoration : தமிழக சட்டப்பேரவையில் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது ஒவ்வொரு துறை மீதான மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடத்தப்படுகிறது. இதன் படி இன்று அறநிலையத்துறை மானிய கோரிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு, ஏற்பாட்டின் பேரில், திமுக தலைவராக இருந்து முன்னாள் முதலமைச்சர கருணாநிதியின் சமாதி மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
Karunanidhi memorial
கருணாநிதி சமாதியில் கோயில் கோபுரம்
அதன் படி சமாதியின் மேல் கோயில் கோபுரம் வரையப்பட்டுள்ளது. இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள், இது தொடர்பாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அமைச்சர்களிடையே, முதலமைச்சர் குடும்பத்துக்கு யார் சிறந்த கொத்தடிமையாக இருப்பது என்ற போட்டியில்,
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தை, கோவில் கோபுரம் போன்று அலங்கரித்து,
temple tower decoration
சேகர்பாபுவிற்கு எதிராக சீறும் அண்ணாமலை
தொழில் போட்டியில் வரம்பு மீறிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் அமைச்சர் சேகர்பாபு. கடவுள் நம்பிக்கையே இல்லாதவர்கள் என்று கூறிக்கொள்ளும் திமுகவினர், காலகாலமாக இந்து சமய மக்கள் நம்பிக்கைகளைப் புண்படுத்துவதையே தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள். பொதுமக்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. தனது தொழில் போட்டிக்கு, இந்து சமய அறநிலையத் துறையைப் பயன்படுத்துவதை அமைச்சர் சேகர்பாபு இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.
Annamalai Vs Sekar Babu
மக்கள் பாடம் புகட்டுவார்கள்
மறைந்த தனது தலைவர் மீது அத்தனை பாசம் என்றால், அமைச்சர் சேகர்பாபு, தனது வீட்டு பூஜையறையில் அவரது புகைப்படத்தை வைத்து வணங்கட்டும். நாத்திகம் என்ற பெயரில் நாடகமாடி, இந்து மத நம்பிக்கைகளை அவமானப்படுத்துவதை இனியும் தொடர்ந்தால், மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.