MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அதிமுகவிற்கு ஷாக்.! சிறந்த தேசியவாதி ஜெயலலிதா.! புகழ்ந்து தள்ளும் அண்ணாமலை

அதிமுகவிற்கு ஷாக்.! சிறந்த தேசியவாதி ஜெயலலிதா.! புகழ்ந்து தள்ளும் அண்ணாமலை

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக அரசு மற்றும் அதிமுக தலைவர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் ஜெயலலிதாவின் புகழை போற்றி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

2 Min read
Author : Ajmal Khan
| Updated : Feb 24 2025, 10:25 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
அதிமுகவிற்கு ஷாக்.! சிறந்த தேசியவாதி ஜெயலலிதா.! புகழ்ந்து தள்ளும் அண்ணாமலை

அதிமுகவிற்கு ஷாக்.! சிறந்த தேசியவாதி ஜெயலலிதா.! புகழ்ந்து தள்ளும் அண்ணாமலை

அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழகம் மட்டுமல்ல இந்தியாவே அதிமுகவை திரும்பி பார்க்கும் வகையில் புதிய உச்சத்தை தொடவைத்தவர். நாடாளுமன்றத்தில் அசைக்கமுடியாத சக்தியாக திகழ்ந்தவர், தமிழகத்தில் இரண்டு முறை தொடர்ந்து ஆட்சியை பிடித்து அசத்தியவர்.

கடந்த 2017ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் காலமானார். இதனையடுத்து அதிமுகவில் ஏற்பட்ட பல குழப்பங்களால் இன்னும் பல தலைவர்கள் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாளையொட்டி தமிழக அரசு சார்பாக அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ஜெயலலிதாவின் மக்கள் நல திட்டங்கள்

ஜெயலலிதாவின் மக்கள் நல திட்டங்கள்

அதிமுக சார்பில் கட்சி தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா உருவசிலைக்கு எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். முன்னதாக  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், மக்களால் மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட தன் தவவாழ்வால் உலகெங்கும் வாழும் தமிழர்களின் உள்ளங்களில் எல்லாம் இன்றும், என்றும் குடியிருக்கும் உன்னதத் தாய், தமிழ்நாட்டு மக்கள் வாழ்வு வளம்பெறும் வகையிலான தனது மக்கள் நலத் திட்டங்களின் செயல்பாட்டால் மக்களால் "அம்மா" என்று அன்புடன் அழைக்கப்பெறும் நம் ஒப்பற்றத் தலைவி, அம்மா அவர்களின் 77-வது பிறந்தநாளில், நம் உயிர்நிகர் அம்மா அவர்களின் பெரும்புகழைப் போற்றி வணங்குகிறேன்.
 

35
சிறப்பு மிக்க வெற்றிக் கூட்டணி அமையப் போகிறது

சிறப்பு மிக்க வெற்றிக் கூட்டணி அமையப் போகிறது

"எனக்குப் பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அதிமுக  மக்களுக்காகவே இயங்கும்" என்று நம் இதயதெய்வம் அம்மா சூளுரைத்த அந்த வெற்றி முழக்கத்தை, கொள்கைப் பிரகடனத்தை செயல்படுத்திட நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டிய நாள் தான் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான சிறப்பு மிக்க வெற்றிக் கூட்டணி அமையப் போகிறது. வியக்கத்தக்க வெற்றிகளை நாம் பெறப்போகிறோம். அதற்கேற்ப அயராது உழைப்போம்! அம்மாவின் உண்மைத் தொண்டர்களாகப் பணியாற்றுவோம் என தெரிவித்துள்ளார். 

45
சுயநலமிக்க துரோகக் கூட்டத்தையும் அடியோடு வீழ்த்திடுவோம்

சுயநலமிக்க துரோகக் கூட்டத்தையும் அடியோடு வீழ்த்திடுவோம்

அம்மா மக்கள் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள பதிவில், இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத சக்தி, தமிழக அரசியல் வரலாற்றின் தனிப்பெரும் அத்தியாயம், தமிழக மக்களின் துயர் துடைத்த தங்கதாரகை, தமிழக மக்களால் மனதார அம்மா என அழைக்கப்பட்ட வரலாற்றுத் தலைவி நம் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா  பிறந்தநாள் இன்று.

எத்தனை இடர்பாடுகள் குறுக்கிட்டாலும், தடைகள் பல நேரிட்டாலும் அகிலமே வியந்து பாராட்டும் அளவிற்கு எண்ணற்ற நல்ல பல திட்டங்களை செயல்படுத்தி தமிழக மக்கள் மனதில் நிரந்தரமாக குடியிருக்கும் இதயதெய்வம் அம்மா அவர்கள் பிறந்த இந்நாளில் மக்களை வஞ்சித்து ஏமாற்றும் திமுக அரசையும், சுயநலமிக்க துரோகக் கூட்டத்தையும் அடியோடு வீழ்த்திட நாம் அனைவரும் உறுதியேற்போம்.
 

55
சிறந்த தேசியவாதி ஜெயலலிதா

சிறந்த தேசியவாதி ஜெயலலிதா

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர், செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் பிறந்த தினம் இன்று. சிறந்த தேசியவாதியாகத் திகழ்ந்தவர். மக்கள் நலனுக்கான பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியவர். அவரது புகழ் என்றும் நிலைத்திருக்கும் என கூறியுள்ளார். 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
எடப்பாடி பழனிசாமி அதிமுக
அரசியல்
தமிழ் செய்திகள்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Deepavali Diya Tips: காற்றில் அகல் விளக்கு அணையாமல் இருக்க சூப்பர் ட்ரிக்! இனி புயலே அடித்தாலும் விளக்கு அணையாது.!
Recommended image2
Now Playing
மதுரையில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சரமாரி கேள்வி! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
Recommended image3
Now Playing
சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு... பெண்கள் பாதுகாப்பு எங்கே? தவெக அரசை கடுமையாக தாக்கிய எம்பி கனிமொழி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved