MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தமிழகத்தில் அனைத்து மாணவர்களின் கல்விக் கடனும் ரத்தாகுமா? அண்ணாமலை கேள்வி

தமிழகத்தில் அனைத்து மாணவர்களின் கல்விக் கடனும் ரத்தாகுமா? அண்ணாமலை கேள்வி

தமிழக அரசு ரூ.48.95 கோடி கல்விக் கடனைத் தள்ளுபடி செய்துள்ளது. ஆனால், மொத்த கல்விக் கடன் நிலுவை ரூ.16,302 கோடியாக உள்ள நிலையில், இந்தத் தள்ளுபடி போதுமானதா என்று பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். 

2 Min read
Author : Ajmal Khan
| Updated : Feb 04 2025, 11:21 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தமிழக மாணவர்களின் அனைத்து கல்வி கடன் ரத்து.?

தமிழக மாணவர்களின் அனைத்து கல்வி கடன் ரத்து.?

உயர்கல்வி படிக்க மாணவர்களுக்கு போதிய நிதி இல்லாத காரணத்தால் வங்கிகள் கல்வி கடன் வழங்கி வருகிறது. அந்த வகையில் அனைத்து மாணவர்களுக்கும் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களுக்கு மருத்துவம் மற்றும்  மருத்துவம் சார்ந்த படிப்புகள் உட்பட அனைத்து படிப்புகளுக்கும் கடன் உதவி வழங்கப்பட்டது.

அதன் படி வழங்கப்பட்ட கல்விக் கடன்களில் ரூ.48.95 கோடி நிலுவைத் தொகையினை மாணாக்கர்களிடமிருந்து வசூலிக்க இயலாத காரணத்தால் அந்த கல்வி கடனை தள்ளுபடி செய்வதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. 

25
48.95 கோடி கல்வி கடனை ரத்து செய்வதால் என்ன பயன்.?

48.95 கோடி கல்வி கடனை ரத்து செய்வதால் என்ன பயன்.?

இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 31 வரை, தமிழகத்தின் கல்விக் கடன் நிலுவை மொத்தம் ரூ. 16,302 கோடி. இந்த நிலையில் வெறும் ரூ.48.95 கோடியை மட்டும் ரத்து செய்வதால் யாருக்கு என்ன பயன்? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக தேர்தல் வாக்குறுதி எண் 159ல், மாணவர்களின் கல்விக் கடனை தமிழக அரசே திருப்பிச் செலுத்தும் என்று கூறி நான்கு ஆண்டுகள் ஆகின்றன.
 

35
திமுகவின் அறிவிப்பு என்ன ஆச்சு.?

திமுகவின் அறிவிப்பு என்ன ஆச்சு.?

திமுகவின் இந்த வாக்குறுதியை நம்பி, கல்விக் கடனைத் திரும்பச் செலுத்தாமல், கடந்த 2023 ஆம் ஆண்டு, வாராக்கடனாக, ரூ. 4,124 கோடி அறிவிக்கப்பட்டு, அதனால் வழக்குகளைச் சந்தித்தும், சுயதொழில் தொடங்க வங்கிக் கடன் கிடைக்காமலும், மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஏராளம்.  தற்போது, கடனை வசூலிக்க வேண்டிய நபர்களை அடையாளம் காண முடியாததால் கல்விக் கடனை ரத்து செய்கிறோம் என்று திமுக அரசு காரணம் கூறியிருப்பது நகைப்பிற்குரியது.

45
இளைஞர்கள் எதிர்காலம் பாழாக வேண்டுமா?

இளைஞர்கள் எதிர்காலம் பாழாக வேண்டுமா?

கல்விக் கடனை ரத்து செய்வோம் என்ற திமுகவின் வாக்குறுதியை நம்பிக் காத்துக்கொண்டிருந்த மாணவ சமுதாயம், ஓடி, ஒளிந்து, தலைமறைவானால்தான் கடனை ரத்து செய்வோம் என்ற தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது திமுக என விமர்சித்துள்ளார். நாட்டிலேயே கல்விக் கடன் மிக அதிகமாக நிலுவையில் இருப்பது தமிழகத்தில்தான்.

இதற்குக் காரணம், இது போன்ற பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து, மாணவர்களையும், பெற்றோர்களையும் பலப்பல தேர்தல்களாகத் தொடர்ந்து ஏமாற்றி வருவதுதான். திமுகவின் பொய்களுக்கு, இளைஞர்கள் எதிர்காலம் பாழாக வேண்டுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

55
கல்வி கடன் ரத்து செய்திடுக

கல்வி கடன் ரத்து செய்திடுக

அந்த வகையில்  உடனடியாக, திமுக தேர்தல் அறிக்கையில் கூறியதன்படி, தமிழக மாணவர்கள் அனைவரின் ஒட்டுமொத்தக் கல்விக் கடன்களையும் ரத்து செய்து, தமிழக அரசே திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும், குறிப்பிட்ட சமூக மாணவர்களுக்கே கல்விக் கடன் ரத்து என்று, மாணவ சமுதாயத்திடம், ஜாதிப் பாகுபாடைத் தூண்டும் விதமாகச் செயல்பட வேண்டாம் என்றும் வலியுறுத்துவதாக அண்ணாமலை அந்த அறிக்கையில் கூறியுள்ளார். 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
அரசியல்
தமிழ் செய்திகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
சென்னையில் அதிர்ச்சி! பிசினஸ்மேன் மனைவியை கரெக்ட் செய்த திலிப்.. நினைக்குப்போதெல்லாம்! வெளியான அதிர்ச்சி தகவல்!
Recommended image2
தகைசால் தமிழர் தோழர் நல்லக்கண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை..! முதல்வர் அறிவிப்பு
Recommended image3
பள்ளி மாணவர்கள்.. அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. மார்ச் 4, 10ம் தேதி விடுமுறை..
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved