MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • காவலர்களே கஞ்சா விற்கும் அவலம்.. திமுக ஆட்சியில் கொடிகட்டி பறக்கும் போதை சாம்ராஜ்யம்.. அன்புமணி விளாசல்

காவலர்களே கஞ்சா விற்கும் அவலம்.. திமுக ஆட்சியில் கொடிகட்டி பறக்கும் போதை சாம்ராஜ்யம்.. அன்புமணி விளாசல்

ஊட்டி மத்திய காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் நசீர் அகமது என்பவர் கஞ்சா மொத்த வணிகம் செய்தததாக கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக பாமக தலைவர் அன்புமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

1 Min read
Author : Velmurugan s
Published : Feb 04 2026, 02:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
கஞ்சா விற்கும் போலீஸ்..
Image Credit : Asianet News

கஞ்சா விற்கும் போலீஸ்..

பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “கஞ்சா வணிகத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறையினரே கஞ்சா விற்பனையாளர்களாகவும் நுகர்வோராகவும் மாறியிருப்பதிலிருந்தே தமிழ்நாட்டில் கஞ்சா வணிகம் எந்த அளவுக்கு முதன்மைத் தொழிலாக மாறியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். வேலியே பயிரை மேய்வதைப் போல காவலர்களே கஞ்சா வணிகம் செய்தால் கஞ்சாவை எப்படி கட்டுப்படுத்த முடியும்? என்ற வினாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் விடையளிக்க வேண்டும்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
பள்ளக்கு கஞ்சா கொண்டு வந்த மாணவன்
Image Credit : Asianet News

பள்ளக்கு கஞ்சா கொண்டு வந்த மாணவன்

இன்னொருபுறம் சென்னை வியாசர்பாடி மகாகவி பாரதியார் நகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவரின் புத்தகப் பையை ஆசிரியர்கள் சோதனையிட்ட போது அதில் கஞ்சா பொட்டலம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பள்ளியின் விளையாட்டுத் திடலில் கஞ்சா பொட்டலம் கிடந்ததாகவும், அதை எடுத்து பையில் வைத்திருந்ததாகவும் அந்த மாணவர் கூறியிருக்கிறார். மாணவர்களின் கைகளில் கிடைக்கும் அளவுக்கு கஞ்சா பொட்டலங்கள் மலிந்து கிடப்பது தான் திமுக ஆட்சியின் மகத்தான சாதனை ஆகும்.

Related Articles

Related image1
எல்லாமே ஏமாற்று வேலை தானா..? ஜனவரியில் ஓய்வு பெற்ற 5000 ஊழியர்களுக்கு ஓய்வூதியம் எங்கே? அன்புமணி கேள்வி
Related image2
Union Budget 2026: வரி வருவாய் பகிர்வு ஏமாற்றமளிக்கிறது.. மத்திய அரசுக்கு ஷாக் கொடுத்த அன்புமணி..
34
தமிழகத்தில் கொடிகட்டி பறக்கும் கஞ்சா வணிகம்
Image Credit : Asianet News

தமிழகத்தில் கொடிகட்டி பறக்கும் கஞ்சா வணிகம்

திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதலாகவே கஞ்சா வணிகம் தமிழ்நாட்டில் கொடிகட்டி பறக்கிறது. முதலமைச்சரிடம் நான் நேரிலும், பல்லாயிரம் முறை அறிக்கை வாயிலாகவும் வலியுறுத்திய போதிலும் கஞ்சா கட்டுப்படுத்தப்படவே இல்லை. இப்படி ஒரு நிலையை ஏற்படுத்தியதற்காக ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும்.

44
திமுகவுக்கு முடிவு கட்டப்போகும் மக்கள்
Image Credit : Facebook / anbumani

திமுகவுக்கு முடிவு கட்டப்போகும் மக்கள்

தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு இளைஞர்களையும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களிடமிருந்து பாதுகாக்க வேண்டும் என்றால், அதற்கான ஒரே வழி திமுக ஆட்சியை அகற்றுவது தான். மக்களைக் காப்பதற்காக அந்த மகத்தான பணியை தமிழ்நாட்டு மக்கள் வரும் தேர்தலில் செய்து முடிப்பார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அன்புமணி ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி
திமுக
திமுக கூட்டணி கட்சிகள்
மு. க. ஸ்டாலின்
தமிழ்நாடு அரசு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Tamil Nadu Weather Update: தமிழகத்தில் வெளுத்து வாங்கப் போகும் மழை! சென்னையில் எப்படி? வானிலை அப்டேட்!
Recommended image2
Now Playing
TASMAC: விஜய் ஆட்சியில் டாஸ்மாக்கில் அடுத்த அதிரடி.. இனி இரவு 10 மணிக்கு மேல் போட்டோ அனுப்பணும்!
Recommended image3
Now Playing
"கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் சோகமாக இருக்க தேவையில்லை" எதற்கும் தொய்வடைய வேண்டாம் - ஸ்டாலின் !
Related Stories
Recommended image1
எல்லாமே ஏமாற்று வேலை தானா..? ஜனவரியில் ஓய்வு பெற்ற 5000 ஊழியர்களுக்கு ஓய்வூதியம் எங்கே? அன்புமணி கேள்வி
Recommended image2
Union Budget 2026: வரி வருவாய் பகிர்வு ஏமாற்றமளிக்கிறது.. மத்திய அரசுக்கு ஷாக் கொடுத்த அன்புமணி..
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved