MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • CM Vijay: முதல்வரே இதெல்லாம் உங்களுக்கு தெரிந்துதான் நடக்குதா? சொல்லுங்கள்.. ஒருத்தரையும் விடக்கூடாது.. நடந்தது என்ன?

CM Vijay: முதல்வரே இதெல்லாம் உங்களுக்கு தெரிந்துதான் நடக்குதா? சொல்லுங்கள்.. ஒருத்தரையும் விடக்கூடாது.. நடந்தது என்ன?

Government Bus: முதலமைச்சர் பிறந்தநாள் விழாவுக்காக சென்னைக்கு கொண்டுவரப்பட்ட 300 புதிய அரசுப் பேருந்துகள், எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் சூழலில் பல நாட்களாகப் பயன்பாடின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

2 Min read
Author : vinoth kumar
Published : Jun 24 2026, 11:35 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : our own

நாடே எரிபொருள் தட்டுப்பாட்டால் திணறிக் கொண்டிருக்கும் நிலையில் 300 பேருந்துகளை வீணாக பல நூறு கி.மீ தொலைவுக்கு இயக்குவது ஏற்றுக்கொள்ளவே முடியாத செயலாகும் என அன்புமணி ராமதாஸ் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் அவர்களின் 52-ஆம் பிறந்தநாளையொட்டி, புதிய பேருந்துகள் இயக்கத் தொடக்கவிழாவுக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சென்னை கொண்டு வரப்பட்ட 300 அரசுப் பேருந்துகள் எந்தப் பயன்பாடும் இல்லாமல் மூன்றாவது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. இந்தியா கடுமையான எரிபொருள் தட்டுப்பாட்டை சந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில் தேவையின்றி பேருந்துகளை இயக்கி எரிபொருளை வீணாக்குவது கண்டிக்கத்தக்கது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Image Credit : X

தமிழ்நாட்டில் மொத்தம் 8 போக்குவரத்துக் கழகங்கள் உள்ளன. மாநகரப் போக்குவரத்துக்கழகம், விரைவுப் போக்குவரத்துக் கழகம் ஆகியவற்றின் தலைமை அலுவலகங்கள் சென்னையில் உள்ளன. மீதமுள்ள 6 போக்குவரத்துக் கழகங்கள் 24 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த போக்குவரத்துக் கழகங்களுக்கு புதிதாக வாங்கப்பட்ட 300 பேருந்துகளின் தொடக்கவிழா கடந்த 22-ஆம் தேதி முதலமைச்சரின் பிறந்தநாளையொட்டி சென்னையில் நடைபெறவுள்ளதாகவும், அதற்காக அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களும் புதிய பேருந்துகளை சென்னைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட போக்குவரத்துக் கழகங்களின் உயரதிகாரிகளுக்கு வாய்மொழி ஆணை பிறப்பிக்கப்பட்டது.

Related Articles

Related image1
Coimbatore: கோவையில் லுலு-வுக்குப் போட்டியாக களமிறங்கும் ஹைப்பர் மார்க்கெட்! எப்போது திறப்பு? என்னென்ன இருக்கு தெரியுமா?
Related image2
Tamilnadu Heavy Rain: பகலில் வெயில்! மாலையில் வெளுக்கப்போகும் கனமழை! கோவை, நீலகிரியில் ஜூன் 28 வரை கொட்டப்போகுது!
35
Image Credit : our own

அதன்படி, புதிதாக தொடங்கி வைக்கப்படவுள்ள 300 பேருந்துகளில் மாநகர மற்றும் விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் தவிர மீதமுள்ள அனைத்தும் நாகர்கோயில், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 24 நகரங்களில் இருந்து கடந்த 22-ஆம் தேதி சென்னைக்கு கொண்டு வரப்பட்டன. ஆனால், 22-ஆம் தேதியும், 23-ஆம் தேதியும் தொடக்க விழா நடத்தப்படாத நிலையில், 300 புதிய பேருந்துகளும் சென்னை கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலைய வளாகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பேருந்துக்கும் இரு ஓட்டுனர்கள், ஒரு நடத்துனர் வீதம் மொத்தம் 900 ஊழியர்களும் சென்னைக்கு வந்துள்ளனர்.

45
Image Credit : Asianet News

புதிய பேருந்துகளின் இயக்கம் எப்போது தொடங்கி வைக்கப்படும் என்பது தெரியவில்லை. தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட ஓட்டுனர்களும், நடத்துனர்களும் தங்குவதற்கு இடமும், உணவும் இல்லாமல் கடந்த இரு நாள்களாக தவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்தக் குழப்பமும், தொழிலாளர்களின் அவதியும் இன்னும் எத்தனை நாள்களுக்கு தொடரும் என்று தெரியவில்லை. ஒரு பேருந்தை ஒரு முறை சென்னைக்கு எடுத்து வந்து மீண்டும் எடுத்துச் செல்வதற்கு குறைந்தது ரூ.15 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை செலவாகும். தொடர்ந்து மூன்றாவது நாளாக இந்தப் பேருந்துகள் எந்தப் பயன்பாடும் இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால், அதனால் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் இழப்பு இன்னும் பல மடங்கு அதிகமாக இருக்கும். ஏற்கனவே போக்குவரத்துக் கழகங்கள் கடும் இழப்பில் இயங்கி வரும் நிலையில், இது போக்குவரத்துக் கழகங்களுக்கு கூடுதல் சுமையையே ஏற்படுத்தும்.

55
Image Credit : X

நாடே எரிபொருள் தட்டுப்பாட்டால் திணறிக் கொண்டிருக்கும் நிலையில் 300 பேருந்துகளை வீணாக பல நூறு கி.மீ தொலைவுக்கு இயக்குவது ஏற்றுக்கொள்ளவே முடியாத செயலாகும். கடந்த காலங்களில் புதிய பேருந்துகள் தொடங்கி வைக்கப்படும் போது சில மண்டலங்களில் இருந்து மட்டும் பெயரளவுக்கு வரவழைத்து விழாவை நடத்துவது தான் வழக்கம். இப்போது 300 பேருந்துகளை தேவையின்றி சென்னைக்கு வரவழைத்திருக்கக் கூடாது.

இவை அனைத்தும் முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு தெரிந்து நடக்கிறதா? இல்லை அவருக்கு தெரியாமல் நடக்கிறதா? என்பது தெரியவில்லை. தேவையில்லாமல் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட பேருந்துகள் அனைத்தையும் உடனடியாக திரும்பிச் செல்ல ஆணையிட வேண்டும். புதிய பேருந்துகளை தேவையில்லாமல் சென்னைக்கு அழைத்து வர அறிவுறுத்திய அதிகாரிகள் யாராக இருந்தால் அவர்கள் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசியல்
டிவி.கே. விஜய்
அன்புமணி ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
அரசு வேலை கனவு நனவானது... TNPSC தேர்வானவர்களுக்கு ஆணை வழங்கிய விஜய்!
Recommended image2
Now Playing
Sports தான் என்னுடைய Life.. அரசியலிலும் விளையாட்டுத்தனம் இருக்கக் கூடாது! - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
Recommended image3
TASMAC Issue: "மதுவிலக்கு இல்லையா? அப்படின்னா குறைந்தபட்சம் தரமான சரக்காவது கொடுங்க!" – விஜய் அரசுக்கு மக்கள் வைக்கும் 7 கோரிக்கைகள்
Related Stories
Recommended image1
Coimbatore: கோவையில் லுலு-வுக்குப் போட்டியாக களமிறங்கும் ஹைப்பர் மார்க்கெட்! எப்போது திறப்பு? என்னென்ன இருக்கு தெரியுமா?
Recommended image2
Tamilnadu Heavy Rain: பகலில் வெயில்! மாலையில் வெளுக்கப்போகும் கனமழை! கோவை, நீலகிரியில் ஜூன் 28 வரை கொட்டப்போகுது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved