குண்டர் சட்டத்தில் ஏர்போர்ட் மூர்த்தி சிறையில் அடைப்பு.! இதுதான் காரணமா.?
விடுதலை சிறுத்தைகள் கட்சியினருடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, புரட்சி தமிழகம் கட்சித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி குண்டா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். திருமாவளவன் மீதான சமூக வலைதள அவதூறுப் பதிவுகள் இந்த மோதலுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

ஏர்போர்ட் மூர்த்தி - விசிக மோதல்
ஏர்போர்ட் மூர்த்தி என்பவர் புரட்சி தமிழகம் கட்சியின் தலைவராக உள்ளார். சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவிப்பதன் மூலம் பிரபலமானவர். கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்திற்கு அருகில் ஏர்போர்ட் மூர்த்தி மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது.
பட்ட பகலில் நடு ரோட்டில் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தாக்குதலுக்கு காரணமாக, ஏர்போர்ட் மூர்த்தி விசிக தலைவர் திருமாவளவன் அவர்களுக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளைப் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது.
நடு ரோட்டில் மோதிக்கொண்ட ஏர்போர்ட் மூர்த்தி
இந்த மோதலின் போது ஏர்போர்ட் மூர்த்தி தன்னைத் தற்காத்துக்கொள்ள கையில் இருந்த கத்தியை பயன்படுத்தி விசிக உறுப்பினர்களைத் தாக்கியதாக விடுதலை சிறுத்தை கட்சியினர் தெரிவித்தனர். இரு தரப்பினரும் போலீஸில் புகார் அளித்தனர். செப்டம்பர் 7ஆம் தேதி, மெரினா போலீசார் ஏர்போர்ட் மூர்த்தியை அடையாறு வீட்டில் வைத்து கைது செய்தனர். அவருக்கு எதிராக கொலை முயற்சி (IPC பிரிவு 307), ஆபாசமான பேச்சு, கொடுங்காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
செப்டம்பர் 8ஆம் தேதி, கொலை முயற்சி பிரிவு கூடுதலாக சேர்க்கப்பட்டது. பின்னர் ஒரு நாள் கஸ்டடி கேட்டு மனு அளித்த எழும்பூர் நீதிமன்ற அனுமதி பெற்று மெரினா காவல்துறை அவரை விசாரணை மேற்கொண்ட நிலையில் நள்ளிரவு ஒரு மணி அளவில் டிஜிபி அலுவலகம் அருகே அவர் பயன்படுத்திய கத்தியை பறிமுதல் செய்தனர்.
குண்டர் சட்டத்தில் ஏர்போர்ட் மூர்த்தி சிறையில அடைப்பு
பின்னர் மீண்டும் நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்ததையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்றைய தினம் (செப்டம்பர் 14ஆம் தேதி,)சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவின்படி,
ஏர்போர்ட் மூர்த்தியை குண்டா சட்டத்தின் (Goondas Act) கீழ் கைது செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவையடுத்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைப்பதற்கான அனைத்து ஆவணங்களையும் சிறைத்துறை அதிகாரிகளிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர். ஏற்கனவே ஏர்போர்ட் மூர்த்தி மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் தற்போது குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.