- Home
- Tamil Nadu News
- அதிமுகவில் முக்கிய பிரமுகர் மறைவு! யார் இந்த கருப்பசாமி பாண்டியன்? அதிர வைக்கும் ஃப்ளாஷ்பேக்!
அதிமுகவில் முக்கிய பிரமுகர் மறைவு! யார் இந்த கருப்பசாமி பாண்டியன்? அதிர வைக்கும் ஃப்ளாஷ்பேக்!
AIADMK Karuppasamy Pandian Passes away: எம்.ஜி.ஆரால் அடையாளம் காட்டப்பட்ட கருப்பசாமி பாண்டியன், அதிமுகவில் பல பதவிகளை வகித்தார். ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திமுகவில் இணைந்த அவர், பின்னர் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.

Karuppasamy Pandian
அதிமுகவில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் அடையாளம் காட்டப்பட்ட கருப்பசாமி பாண்டியன். தனது 25-வது வயதிலேயே 1977-ம் ஆண்டு நெல்லை மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். பின்னர், அவருக்கு கட்சியில் நெல்லை மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.
former MLA Karuppasamy Pandian
ஆலங்குளம், பாளையங்கோட்டை, தென்காசி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தார். பொதுச்செயலாளர் பதவிக்கு அடுத்த படியான கட்சியில் துணைப் பொதுச் செயலாளராகவும் பதவி வகித்தார். இந்தநிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியை விட்டு விலகி திமுகவில் இணைந்தார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் மழை கூடவே வெயிலும் இருக்காம்! எந்தெந்த மாவட்டங்களில்! வானிலை மையத்தின் லேட்டஸ் அப்டேட்!
AIADMK
திமுகவிலும் அவருக்கு நெல்லை மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. பின்னர், திமுக தலைமையுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, 2015-ம் ஆண்டு கட்சியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார். இதனால் 2016-ம் ஆண்டு திமுகவில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.
Edappadi Palanisamy
இதையடுத்து அதிமுகவின் பின்னணியில் இருந்த சசிகலா, டி.டி.வி.தினகரனால் ஓரங்கட்டப்பட்டார். இந்நிலையில், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக. தலைமையை சசிகலா கைப்பற்றிய நேரத்தில், அக்கட்சியை விட்டு விலகி மீண்டும் 2018-ம் ஆண்டு திமுகவில் இணைந்தார். பின்னர் மீண்டும் திமுகவில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் முன்னிலையில் கடந்த 2020ம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார்.
இதையும் படிங்க: பாஜகவில் இணைய திட்டமா.? அமித்ஷாவை சந்தித்த ஜி.கே வாசன்- காரணம் என்ன.?
AIADMK former MLA Karuppasamy Pandian passes away
இந்நிலையில், அண்மையில் அதிமுக அமைப்பு செயலாளராக கருப்பசாமி பாண்டியன்(76) நியமிக்கப்பட்டார். உடல்நலக்குறைவு காரணமாக அண்மை காலமாக தீவிர அரசியலில் இருந்து கருப்பசாமி பாண்டியன் ஒதுங்கியே இருந்து வந்தார். இந்நிலையில் இன்று காலை தூக்கத்திலேயே கருப்பசாமி பாண்டியன் உயிர் பிரிந்தது. கருப்பசாமி பாண்டியன் மறைவுக்கு அதிமுக தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.