MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தமிழகத்தில் மழை கூடவே வெயிலும் இருக்காம்! எந்தெந்த மாவட்டங்களில்! வானிலை மையத்தின் லேட்டஸ் அப்டேட்!

தமிழகத்தில் மழை கூடவே வெயிலும் இருக்காம்! எந்தெந்த மாவட்டங்களில்! வானிலை மையத்தின் லேட்டஸ் அப்டேட்!

TN Weather Update: தமிழகத்தில் கோடை வெயில் அதிகரித்து வருவதால், பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. 

2 Min read
Author : vinoth kumar
| Updated : Mar 25 2025, 04:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Summer

Summer

தமிழகத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இதனிடையே பொதுமக்கள் மதியம் 12 மணி முதல் மாலை 3 மணிவரை வெளியே வரவேண்டாம் என்று பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் வரும் நாட்களில் வெயில் அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இதையும் படிங்க: டாஸ்மாக் வழக்கு! ஒரே நேரத்தில் இரு நீதிபதிகள் விலகல்! அடுத்து விசாரிக்க போவது யார் தெரியுமா?

24
Tamilnadu Rain

Tamilnadu Rain

இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 27ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.  அதேபோல், மார்ச் 28 முதல் 31ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

இதையும் படிங்க:  சென்னையில் மின்சார ரயில் சேவையில் மாற்றம்! அறிவிப்பை வெளியிட்ட தெற்கு ரயில்வே!

34
Temperature increased

Temperature increased

வெப்ப அளவின் வேறுபாடு 

இன்று முதல் 29ம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டியும், ஓரிரு இடங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாகவும் இருக்கக்கூடிய நிலையில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
 

44
Chennai weather

Chennai weather

சென்னை வானிலை நிலவரம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வானிலை
கோடைக்காலம்
மழை செய்திகள்
கனமழை
வெப்ப அலை
தமிழ்நாடு வானிலை அறிக்கை

Latest Videos
Recommended Stories
Recommended image1
தமிழக அரசியலில் ட்விஸ்ட்.. புதிய கட்சி தொடங்கினார் சசிகலா.. எம்.ஜி.ஆர், ஜெ., படங்களுடன் கொடி!
Recommended image2
26 வயது அபிராமி இருந்த அந்த கோலம்! நேரில் பார்த்த கணவருக்கு நடந்த அதிர்ச்சி.! போலீஸ் விசாரணையில் பகீர்!
Recommended image3
21 தான் தர முடியும்.. இஷ்டம்னா இருங்க இல்லைனா.. கெத்து காட்டும் திமுக.. புலம்பும் கதர்சட்டைகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved