- Home
- Tamil Nadu News
- முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் என்ன ஆச்சு? அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி!
முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் என்ன ஆச்சு? அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி!
Dindigul Srinivasan Admitted Apollo Hospital: முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Former Minister Dindigul Srinivasan
முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
திண்டுக்கல் சீனிவாசன் அதிமுகவின் முன்னாள் அமைச்சராக பொறுப்பு வகித்துள்ளார். இவர் 1989ம் ஆண்டு முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு மூன்று முறை மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016ம் ஆண்டு அதிமுக சார்பில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இவர் தமிழக வனத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
AIADMK Dindigul Srinivasan
அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன்
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாளராக மாறினார். ஓ. பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் வகித்த பொருளாளர் பதவி திண்டுக்கல் சீனிவாசனுக்கு எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார். பின்னர் 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருந்து வருகிறார்.
இதையும் படிங்க: மரண பயம் கண்ணில் தெரிகிறது முதல்வரே! இன்னும் ஒரு வருஷம்தான் இருக்கு! அதுவரை ஆடுங்கள்! நயினார் நாகேந்திரன்!
Apollo Hospitals
அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி
இந்நிலையில் திண்டுக்கல் சீனிவாசனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: மக்கள் விரும்பும் அதிமுக,பாஜக கூட்டணி.! விமர்சித்தால் அவ்வளவுதான்- திமுகவை எச்சரிக்கும் ஆர்.பி.உதயகுமார்
Food allergies
உணவு ஒவ்வாமை
இதுதொடர்பாக அவருக்கு என்ன ஆச்சு என்பது தொடர்பாக விசாரித்த போது உணவு ஒவ்வாமை காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வரும் திண்டுக்கல் சீனிவாசன் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என கூறப்படுகிறது.