MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அந்த பயம் இருக்கட்டும்.! அதிமுகவுக்கு இது கூட தெரியாமல் அரசியல் செய்யறாங்க.! அமைச்சர் அன்பில் மகேஷ்.!

அந்த பயம் இருக்கட்டும்.! அதிமுகவுக்கு இது கூட தெரியாமல் அரசியல் செய்யறாங்க.! அமைச்சர் அன்பில் மகேஷ்.!

மயிலாடுதுறையில் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்றார். புதிய உடற்கல்வி பாடத்திட்டம் மற்றும் கலைஞர் பல்கலைக்கழக மசோதா குறித்து விளக்கமளித்தார்.

2 Min read
Author : vinoth kumar
Published : Aug 07 2025, 08:31 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
அடைவுத் தேர்வு ஆய்வுக் கூட்டம்
Image Credit : Asianet News

அடைவுத் தேர்வு ஆய்வுக் கூட்டம்

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான அடைவுத் தேர்வு ஆய்வுக் கூட்டம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 488 தலைமையாசியர்கள் பங்கேற்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
 பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்
Image Credit : X/Anbil Mahesh

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

இதன் பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்:- உடற்கல்விக்கான பாடத்திட்டத்துக்கான புத்தகம் கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சிக்குப் பின்னர் விளையாட்டு, மனம், உடல் சார்ந்து பிள்ளைகள் எப்படி தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என்ற வகுப்புகள் நடத்தப்படும். இந்த கல்வியாண்டிலேயே இது அமல்படுத்தப்பட்டுவிடும்.

Related Articles

Related image1
யாருக்காக ஆட்சி நடத்துறீங்க முதல்வரே! சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குதுங்க! ஸ்டாலினுக்கு எதிராக சரமாரியாக வெடிக்கும் TTV!
Related image2
போலீஸ் மேல கைய வச்சா என்ன நடக்கும்னு காட்டுறேன்! ஒரு கோடி ரூபாய் நிதியுதவியை அறிவித்த கையோடு கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
34
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்
Image Credit : cv shanmugam

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்

கலைஞர் பல்கலைக் கழகம் அமைப்பது தொடர்பான மசோதாவை தமிழக ஆளுநர் எந்தவொரு கருத்தும் கேட்காமல் வெறுமனே குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார். ஒவ்வொரு முறையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்ட ரீதியாக வெற்றி பெற வேண்டிய சூழ்நிலைதான் உள்ளது. கண்டிப்பாக நீதிமன்ற ஒரு நல்ல தீர்ப்பை தமிழக அரசுக்கு வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தின் பெயருக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு குறித்து கேட்டபோது, தமிழக மக்களுக்காக திட்டத்தைக் கொண்டு வருகிறோம். யார் பெயர் அதில் உள்ளது என்பது முக்கியமா? அல்லது திட்டத்தால் மக்கள் பயன்பெறுவது முக்கியமா? என்ற வித்தியாசம் கூட தெரியாமல், இதில் ஒரு அரசியல் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு செய்வது வருத்தமாக உள்ளது.

44
எம்.ஜி.ஆர் மதிய உணவுத் திட்டம்
Image Credit : Google

எம்.ஜி.ஆர் மதிய உணவுத் திட்டம்

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மதிய உணவுத் திட்டம் என்றுதான் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அம்மா உணவகம் என்ற பெயரில்தான் தொடர்ந்து அதனை செயல்படுத்தி வருகிறோம். மக்களிடம் நன்றாக சென்றடைந்துவிடும் என்ற பயத்தின் காரணமாகத்தான் அவர் இவ்வாறு செய்கிறார் என்றார். மயிலாடுதுறை மாவட்டத்தில் பல மாதங்களாக முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடம் காலியாக உள்ளது குறித்து கேட்டதற்கு, அதிக அளவில் முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். அடுத்து பணி உயர்வு பட்டியல் வரவுள்ளது. அப்போது மயிலாடுதுறை மாவட்டத்துக்கு கண்டிப்பாக முதன்மைக் கல்வி அலுவலர் நியமிக்கப்படுவார் என்றார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசியல்
தமிழ்நாடு
அன்பில் மகேஷ் பொய்யாமொழி
மு. க. ஸ்டாலின்
திமுக
எடப்பாடி பழனிசாமி

Latest Videos
Recommended Stories
Recommended image1
CM Vijay: இம்மாத இறுதியில் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்..! பிரதமருடன் முக்கிய சந்திப்பு..
Recommended image2
Now Playing
“திசை திருப்பும் அரசியல் செய்யாதீங்க” ஆதவ் அர்ஜூனாவுக்கு சிவசங்கர் கடும் எச்சரிக்கை!
Recommended image3
AIADMK: விஜய்யை எப்படி வீழ்த்த போகிறீர்கள்? அரசியல் களம் திமுக VS தவெக! அதிமுகவை மீட்க 3 மேஜிக் ஐடியா
Related Stories
Recommended image1
யாருக்காக ஆட்சி நடத்துறீங்க முதல்வரே! சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குதுங்க! ஸ்டாலினுக்கு எதிராக சரமாரியாக வெடிக்கும் TTV!
Recommended image2
போலீஸ் மேல கைய வச்சா என்ன நடக்கும்னு காட்டுறேன்! ஒரு கோடி ரூபாய் நிதியுதவியை அறிவித்த கையோடு கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved