அடுத்த ஆட்டம் ரெடி.! 4 நாட்களுக்கு கனமழை.! ஆட்சியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு
Heavy Rain Alert : வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் நாளை முதல் மழை பெய்யும். டிசம்பர் 10 முதல் 12 வரை கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அலர்ட் கொடுத்துள்ளது.

Tamil Nadu Rains
அடுத்த ஆட்டம் தயார்
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை மீண்டும் தனது ஆட்டத்தை ஆரம்பிக்கவுள்ளது. வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் நாளை முதல் மழை பெய்யவுள்ளது. இது தொடர்பாக முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு பேரிடர் மேலாண்மை துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் நிலையான வழிகாட்டு விதிமுறைகளின் படி பேரிடர்களை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்ப்பட்டுள்ளது.
Tamil Nadu Rains
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், தென்கிழக்கு வங்காள விரிகுடா கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து டிசம்பர் 11-ஆம் தேதி வாக்கில் இலங்கை-தமிழ்நாடு கடற்கரையில் தென்மேற்கு வங்காள விரிகுடாவை அடைய வாய்ப்புள்ளது. இதனால் தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை வரை என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Heavy Rain
ஆட்சியர்களுக்கு அலர்ட்
அதன் படி கனமழையை பொறுத்தவரை (6.45 செ.மீ முதல் 11. 55 செ.மீ.) மிக அதிக மழை (11.56 செ.மீ. 20.4 செ.மீ.) மிக அதிக மழைப்பொழிவு (20.4 செமீக்கு மேல்) என வகைப்படுத்தப்பட்டுளது. அந்த வகையில் 10 ஆம் தேதி மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து 11ஆம் தேதி தமிழகத்தின் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
Tamilnadu rain Alert
கன முதல் மிக கன மழை
டிசம்பர் 12ஆம் தேதி தமிழகத்தின் செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது
tamilnadu rain
தயார் நிலையில் இருங்கள்
எனவே,மழை தொடர்பான பேரிடர்களைக் கையாள்வதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளைக் கடைப்பிடிக்கவும் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட அரசு இயந்திரங்களையும் தயார்படுத்தவும், கன மற்றும் மிகக் கன மழையை சமாளிக்க போதுமான தயார்நிலை நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எந்தவித அசம்பாவிதங்கள் நடந்தால் உடனடியாக பேரிடம் மேலாண்மை அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.