MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சித்திரை மாதத்தில் நிலம் பதிவு செய்ய போறீங்களா.? பொதுமக்களுக்கு ஜாக்பாட்- தமிழக அரசு அதிரடி

சித்திரை மாதத்தில் நிலம் பதிவு செய்ய போறீங்களா.? பொதுமக்களுக்கு ஜாக்பாட்- தமிழக அரசு அதிரடி

சித்திரை மாத சுப முகூர்த்த நாளான ஏப்ரல் 30, 2025 அன்று சொத்து பதிவு செய்ய கூடுதல் முன்பதிவு வில்லைகளை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. 

1 Min read
Author : Ajmal Khan
Published : Apr 28 2025, 08:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13

Property registration in Chithirai month : சொந்தமான வீடு, நிலம் வாங்க வேண்டும் என்பது பலரின் கனவாகும், அந்த வகையில் பல ஆண்டுகள் சிறுக சிறுக சேமித்த பணத்தில் வீடோ அல்லது நிலம் வாங்கி அதில் வீடு கட்டவோ திட்டமிடுவார்கள். அப்படி வாங்கும் சொத்துக்களை நல்ல நாளில், சுப முகூர்த்த நாளில் வாங்கவே விருப்பப்படுவார்கள். அந்த வகையில் முக்கிய விஷேச நாட்களில் பத்திர பதிவு அலுவலகத்தில் எப்போதும் இல்லாதை விட கூட்டம் அதிகமாக காணப்படும். இதன் காரணமாக நல்ல  நாளில் வாங்க நினைப்பவர்கள் ஏமாற்றம் அடையும் நிலை உருவாகும்.

23
Property registration

Property registration

சித்திரையில் பத்திர பதிவு

இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு பொதுமக்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், மங்களகரமான தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

தற்போது சித்திரை மாதத்தின் மங்களகரமான தினமான 30.04.2025 அன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.

33
Auspicious day

Auspicious day

கூடுதல் வில்லைகள் ஒதுக்கீடு

இதனை ஏற்று சித்திரை மாதத்தின் மங்களகரமான தினமான 30.04.2025 அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும்

100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுக்கு கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு
வாகனப் பதிவு
தமிழ் செய்திகள்
மதுரை சித்திரைத் திருவிழா
Latest Videos
Recommended Stories
Recommended image1
அமலுக்கு வந்த தேர்தல் விதிகள்.. ரூ.50000 வரை மட்டுமே அனுமதி..! இவ்வளவு கண்டிஷன் இருக்கா..?
Recommended image2
Now Playing
சிபிஐ அலுவலகத்தில் இருந்து சிரித்த முகத்துடன் வெளியே வந்த தளபதி விஜய்...
Recommended image3
Now Playing
ஒரு வாக்குச்சாவடியில் 1200 வாக்காளர்கள் மட்டுமே.. மொபைல் போன்கள் அனுமதி இல்லை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved