திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பீர், கறி விருந்து பார்ட்டி.! வெளியான ஷாக் வீடியோ
தேர்தல் பணிகளை மேற்கொள்வது தொடர்பான திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு மது விருந்தும், கறி விருந்தும் பரிமாறப்பட்டது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Beer party for DMK executives : தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்து 4 வருடங்களை முடிவடைந்துள்ள நிலையில், 5ஆம் ஆண்டில் கால் எடுத்து வைத்துள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாத காலமே உள்ள நிலையில், மீண்டும் ஆட்சியை பிடிக்க களத்தில் இறங்கியுள்ளது திமுக,
200 தொகுதிகளை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் கிளைக்கழகம் முதல் மாநில நிர்வாகிகள் வரை தேர்தலை பணியில் தீவிரம் காட்ட கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.
DMK executives meeting
திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
இதனையடுத்து தேர்தல் பணியை மேற்கொள்வது தொடர்பாக அந்த, அந்த பகுதியில் உள்ள திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டமானது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு மது விருந்தோடு கறி விருந்து பறிமாறப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருக்கோவிலூர் மேற்கு, கிழக்கு, வடக்கு ஒன்றிய வாக்குச்சாவடி இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம்
Beer party dmk meeting
திமுக நிர்வாகிகளுக்கு பீர் விருந்து
திருக்கோவிலூர் அடுத்த சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எம்எல்ஏக்கள் வசந்தம் கார்த்திகேயன் உள்ளிட்ட திமுக மாவட்ட மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். அப்போது தேர்தல் குறித்தும் வாக்குச்சாவடியில் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் விளக்கியுள்ளனர்.
இந்த கூட்டத்திற்கு பிறகு மாவட்ட செயலாளர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் சென்ற நிலையில், அத்தொகுதியை சேர்ந்த 3 ஒன்றிய செயலாளர்கள் மூலமாக வந்திருந்த இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் என 300க்கும் மேற்பட்டோருக்கு பீர் பாட்டிலுடன் கூடிய அசைவ விருந்து பறிமாறப்பட்டுள்ளது.
Beer party for DMK executives
வெளியான ஷாக் வீடியோ
மஹாலில் உணவுக்காக வரிசையாக அமர்ந்திருந்த இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு இலையுடன் ஆளுக்கு ஒரு பீர் பாட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் சிக்கன் மற்றும் மட்டனோடு விருந்தும் வைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. மதுவிலக்கஐ அமல்படுத்த வேண்டும் என தமிழக மக்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், பகிரங்கமாக ஆளுங்கட்சியே இளைஞர்களுக்கு பீர் விருந்து வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.