10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 78 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை - உடனே விண்ணப்பிக்க அரசு அழைப்பு
வெல்டர், பிட்டர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேவைப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.30,000/- முதல் ரூ.78,000/- வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
job opportunities
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு
ஆண்டு தோறும் லட்சக்கணக்கானோர் படிப்பு முடித்து படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை தேடி வருகிறார்கள். ஒரு சிலர் சொந்த தொழில் தொடங்க திட்டமிடுவார்கள். இன்னும் சிலர் வெளிநாடுகளில் வேலை தேடி புறப்படுவார்கள். அந்த வகையில் வெளிநாட்டில் வேலைக்காக பலரிடம் பணம் கொடுத்து ஏமாறும் நிலையும் உள்ளது.
எனவே வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்பவர்கள் உரிய முறையில் விசா உள்ளதா.? என்ன வேலை என்பதை அறிந்து பணிக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. அந்த வகையில் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் சார்பாக சவுதி அரேபியாவில் வேலைக்கான அழைப்பு தற்போது விடுக்கப்பட்டுள்ளது.
பணியிடம்
இந்த நிலையில் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிய Welder (CS- GTAW +SMAW, SS-GTAW +SMAW, CS & SS-GTAW +SMAW. Alloy (P92 & p91)-GTAW+ SMAW, Duplex & Super Duplex GTAW +SMAW). Piping Fabricator, Piping Fitter. Structure Fabricator, Structure Fitter. Millwright Fitter, Grinder (AG4 &AG7) /Gas cutter மற்றும் Piping Foreman தேவைப்படுகிறார்கள்.
மாத சம்பளம்
ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிய குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று 3 வருட பணி அனுபவத்துடன் 44 வயதுக்கு உட்பட்ட Welder பணிக்கு ரூ.40,000/-முதல் ரூ. 78,000/- வரை, Piping Fabricator ரூ. 40,000/- முதல் ரூ.51,000/- வரை Piping Fitter ரூ. 36,000/- முதல் ரூ. 42,000/- வரை Structure Fabricator ரூ. 42.000/- முதல் ரூ. 51,000/- வரை Structure Fitter ரூ. 36,000/- முதல் ரூ. 42,000/- வரை Millwright Fitter ரூ. 42,000/- முதல் ரூ. 51,000/- வரை Grinder/Gas cutter ரூ.30,000/- முதல் ரூ. 32,000/- வரை மற்றும் Piping Fireman ரூ. 53,000/- முதல் ரூ. 60,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும். மேலும் உணவு மற்றும் இருப்பிடம். வேலை அளிப்பவரால் வழங்கப்படும்.
job vacancies in uae
சேவை கட்டணம் மட்டுமே
மேற்குறிப்பிட்ட பணிக்கு செல்பவர்கள் விசா கிடைத்தப்பின்னர் இந்நிறுவனத்திற்கு சேவைக்கட்டணமாக ரூ. 35,400/- மட்டும் செலுத்தினால் போதும். மேலே குறிப்பிட்டுள்ள பணிகளுக்கு செல்ல விருப்பமுள்ள ஆண் பணியாளர்கள் www.omcmanpower.tn.gov.in என்ற இந்நிறுவன இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை என்ன.?
மேலும் ovemcinm@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் சுய விவர விண்ணப்பபடிவம், கல்வி, பணி அனுபவ சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் (Passport) நகலினை தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கூடுதல் விவரங்களுக்கு அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவன தொலைபேசி எண் 044-22502267 மற்றும் whatsapp எண் 9566239685 வாயிலாக அறிந்துகொள்ளலாம்.