தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யப்போகுது.. வானிலை மையம் அப்டேட்.. எந்த இடங்கள் தெரியுமா?
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடியில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களிலும் கனமழை பெய்யும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/
மேலும் சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும். நவம்பர் 14 ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதி, அதை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமில்லாமல், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
குடும்பத்தோடு ஜாலி ரைடு போக சூப்பரான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்.. இவ்வளவு கம்மி விலையா..