அரசு பேருந்தில் பயணம் செய்தாலே போதும்.! 50ஆயிரம் ரூபாயை அள்ளித்தரும் தமிழக அரசு
தமிழக அரசு சார்பாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தனியார் துறைக்கு போட்டியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு ரூ.50,000 வரை பரிசு வழங்கப்பட உள்ளது.
தனியாருக்கு இணையாக அரசு துறைகள்
தமிழக அரசு சார்பாக ஏழை, எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அதிலும் தனியார் நிறுவனங்களுக்கு போட்டி போட்டு பல்வேறு துறைகளுக்கு முக்கியத்துவம் வழங்கிவருகிறது. அதன் படி ஆம்னி பேருந்துகளுக்கு போட்டியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகமும் பேருந்துகளை குறைந்த கட்டணத்தில் இயக்கி வருகிறது.
இந்தநிலையில் அரசு போக்குவரத்து பயணத்தை ஊக்குவிக்கும் வகையில் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி சாதாரண நாட்களில் பயணம் செய்த பயணிகளுக்கு 50ஆயிரம் ரூபாய் வரை பரிசு வழங்கப்படுகிறது. இது தொடர்பாக அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
koyambedu
அரசு பேருந்தில் பயணித்தால் பரிசு
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகளில், ஆன்லைன் முன்பதிவு திட்டத்தில், வார விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களை தவிர்த்து, சாதாரண நாட்களில் பயணம் செய்வதை ஊக்குவிக்கும் வகையில், அக்டோபர்-2024 மாதத்திற்கான குலுக்கல் முறையில் பதிமூன்று (13) பயணிகளை குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர். அந்த வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொலை தூர பேருந்துகளில், பொதுமக்கள் எவ்வித சிரமுமின்றி பயணம் செய்ய ஏதுவாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் வலைதளமான https://www.tnstc.in. TNSTC செயலி etc.. மூலம் பயணச் சீட்டு முன்பதிவு செய்யும் முறை செயல்பட்டு வருகின்றது.
Koyambedu
குலுக்கல் முறையில் பரிசு
வார விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களை தவிர்த்து இதர நாட்களில் முன்பதிவு செய்து பயணிகள் எளிதாக பயணம் செய்வதை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு மாதத்திலும் வார விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களை தவிர்த்து, இதர நாட்களில் பயணிப்பதற்காக, முன்பதிவு செய்யும் பயணிகளில் மூன்று பயணிகள் கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு. அப்பயணிகளுக்கு தலா ரூ.10,000/- வழங்கும் திட்டம் ஜனவரி-2024 முதல் தொடங்கப்பட்டு. வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
13 பயணிகளுக்கு பரிசு
இத்திட்டத்தின் மூலம் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் பயனடைய வேண்டும் என்ற நோக்கில், ஜூன்-2024 முதல் 13 பயணிகளை கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்து, முதல் மூன்று பயணிகளுக்கு தலா ரூ.10,000/- மும். மற்ற பயணிகளுக்கு தலா ரூ.2,000/-மும் வழங்கிட முடிவு செய்யப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. இந்தநிலையில் கடந்த அக்டோபர் மாதம் அரசு பேருந்தில் பயணம் செய்த 13 பயணிகள் குலுக்கல் முறையில் போக்குவரத்துத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி தேர்வு செய்தார். அக்டோபர்-2024 மாதத்திற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட 13 பயணிகளுக்கு பரிசுகள் விரைவில் வழங்கப்படும்.