- Home
- Tamil Nadu News
- கொத்தாக 4 நாள் தொடர் விடுமுறை.! குஷியில் மாணவர்கள், கொண்டாட்டத்தில் அரசு ஊழியர்கள்
கொத்தாக 4 நாள் தொடர் விடுமுறை.! குஷியில் மாணவர்கள், கொண்டாட்டத்தில் அரசு ஊழியர்கள்
கோடை வெயிலை சமாளிக்க அரசு ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு மார்ச் இறுதியில் தொடர்ச்சியாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ரம்ஜான் பண்டிகை மற்றும் வங்கி கணக்கு முடிவு காரணமாக 4 நாட்கள் விடுமுறை கிடைப்பதால் பலரும் பயண திட்டமிடலில் உள்ளனர்.

Tamil Nadu holidays : விடுமுறை எப்போது கிடைக்கும் சந்தோஷமாக வெளியூர் செல்லலாம், உறவினர் வீட்டிற்கு செல்லலாம், நண்பர்களோடு விளையாடலாம், வீட்டில் ஓய்வு எடுக்கலாம் என பல கனவுகளோடு காத்திருக்கும் மாணவர்கள் மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷியான செய்தி வெளியாகியுள்ளது.
அந்த வகையில் மாணவர்களுக்கு தற்போது சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு ஆண்டு இறுதி தேர்வு நடைபெற்று வருகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கோ ஏப்ரல் மாதம் முதல் வாரம் முதல் தேர்வுகள் தொடங்கப்படவுள்ளது.
School Holidays
இந்த நிலையில் கோடை வெயிலின் தாக்கம் இப்போதே தொடங்கிவிட்டது. இதன் காரணமாக பகல் வேளைகளில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்படுகிறது. அந்த வகையில் குளுமையான இடங்களுக்கு செல்ல தற்போதே பலரும் திட்டமிட்டு வருகிறார்கள்.
எனவே கோடை விடுமுறைக்கு முன் கூட்டியே ஊட்டி, கொடைக்கானல் செல்ல தயாராகி வருகிறார்கள். எனவே சனி மற்றும் ஞாயிறு விடுமுறையோடு சேர்த்து தொடர்ந்து விடுமுறை வருமா என அரசு ஊழியர்கள் தனியார் நிறுவன ஊழியர்கள் காத்துள்ளனர்.
RAMADAN HOLIDAY
அந்த வகையில் வருகிற மார்ச் 29ஆம் தேதி முதல் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைக்கவுள்ளது. அதன் படி மார்ச் 29ஆம் தேதி சனிக்கிழமை, மார்ச் 30ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 31ஆம் தேதி திங்கட்கிழமை ரம்ஜான் பண்டிகையையொட்டி அரசு விடுமுறையானது அளிக்கப்படவுள்ளது. இதன் காரணமாக தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்கவுள்ளது.
BANK Public Holiday
இதனை தொடர்ந்து ஏப்ரல் 1ஆம் தேதி வங்கி கணக்கு முடிவு அரசு விடுமுறை நாளாகும். எனவே தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைக்கவுள்ளதால் அரசு ஊழியர்கள், பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாமல் தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் ஜாக்பாட் அடித்துள்ளது. எனவே இந்த தொடர் 4 நாட்கள் விடுமுறையை கொண்டாட தற்போதை பயண திட்டம் வகுக்க தொடங்கியுள்ளனர்.