2026 சட்டமன்ற தேர்தல்! அதிமுக - பாஜக கூட்டணியில் சீமான்? ரூட்டை மாற்றும் நாதக?
2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுமா அல்லது கூட்டணி அமைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது

2026 assembly elections
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றனர். திமுக கடந்த சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட அதே கூட்டணி கட்சிகளுடன் தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. அதிமுக பாஜக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில் இதில் மேலும் சில கட்சிகள் இணைய உள்ளது. அதேபோல் புதிய கட்சியை தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனித்து போட்டியிட உள்ளார்.
Naam Tamilar Katchi
ஒவ்வொரு தேர்தலில் தனித்து போட்டியிடும் சீமான்
இந்நிலையில் பிரதான கட்சிகளாக உள்ள திமுக, அதிமுக தனித்து போட்டியிட அஞ்சு நடுங்கும் நிலையில் சட்டமன்றம், உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் சீமான் தனித்து போட்டியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். சீமான் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவரா அல்லது கூட்டணி அமைத்து போட்டியிட போகிறாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: ராஜ்யசபா எம்.பியாகும் அண்ணாமலை.? எந்த மாநிலத்தில் இருந்து தெரியுமா.?
Finance Minister Nirmala Sitharaman
சீமான் - நிர்மலா சீதாராமன் ரகசிய சந்திப்பு
இதற்கு காரணம் என்னவென்றால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சீமான் ரகசியமாக சந்தித்ததாக தகவல் வெளியானது. ஆனால், இதனை சீமான் திட்டவட்டமாக மறுத்து விட்டார். அதேபோல் அண்ணாமலை, சீமான், அமர்பிரசாத் ரெட்டி உள்ளிட்டோர் ஒரு அறையில் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றும் வெளியானது. இதனால் சீமான் அதிமுக - பாஜக கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர். பாஜகவின் புதிய மாநிலத் தலைவராக பொறுப்பு ஏற்றுள்ள நயினார் நாகேந்திரன், சீமானின் நாம் தமிழர் கட்சியும் பாஜக - அதிமுக கூட்டணிக்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
Seeman
இன்னும் 4 மாதத்தில் சீமானின் ஆட்டத்தை பார்ப்பீர்கள்
அதேசமயம் வரும் சட்டமன்றத் தேர்தலிலும் தனித்து போட்டி என்று திட்டவட்டமாகத் தெரிவித்த சீமான், ஒவ்வொரு தொகுதிக்காக வேட்பாளர்களையும் அறிவித்து வருகிறார். இந்நிலையில் கடலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சீமான்: எங்களை நம்பி ஓட்டளித்த மக்களால் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதே வேகத்தோடு, 2026 தேர்தலில் புதிய வியூகத்தோடு களம் இறங்குகிறோம். நாம் தமிழர் கட்சியின் பலம் மற்றும் பலவீனம் தெரிந்ததால் எங்களின் போர் முறையை மாற்ற உள்ளோம். சிவனின் ஆட்டத்தை பார்த்த நீங்கள் இன்னும் 4 மாதத்தில் சீமானின் ஆட்டத்தை பார்ப்பீர்கள்.
AIADMK - BJP Alliance
வலுக்கட்டாயமாக கூட்டணியில் சேர்த்தது கூறுவது சரியல்ல
என் கட்சியில் இருந்து விலகுபவர்களை, வேறு கட்சிக்கு செல்வதற்கு பதிலாக விஜய் கட்சிக்கு செல்லுமாறு கூறினேன். காரணம், அவர்களை அங்கு ஒருநாளும் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். என் தலைமையை ஏற்று ஆரிய - திராவிட கலப்பில்லாத கட்சிகள் வந்தால் கூட்டணி பற்றி யோசிப்பேன். அதிமுகவை பாஜக வலுக்கட்டாயமாக கூட்டணியில் சேர்த்தது எனக் கூறுவது சரியல்ல. கூட்டணி முடிவானதும் அதிமுக பொதுச்செயலர் பழனிசாமியும், அமித் ஷாவும் விருந்து சாப்பிட்ட பின் அது பற்றி பேசக்கூடாது என தெரிவித்தார்.