மகளிர் சுய உதவி குழுவிற்கு குட் நியூஸ்.! அசத்தலான தகவலை சொன்ன தமிழக அரசு
தமிழக அரசு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இணையவழி விற்பனை, அங்காடி, சிறுதானிய உணவகங்கள் மூலம் ரூ.194.57 கோடி மதிப்பிலான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

மகளிர் சுய உதவி குழுவிற்கு குட் நியூஸ்.! அசத்தலான தகவலை சொன்ன தமிழக அரசு
ஆண்களுக்கு நிகராக பெண்களும் பல்வேறு துறைகளில் கால்பதித்து வரும் நிலையில், அவர்களுக்கு ஊக்கம் அளிக்க பல்வேறு திட்டங்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது. அதன் படி, மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுழல் நிதி, தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்ய கண்காட்சி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்கள் அனைத்துத் தரப்பினரையும் சென்றடையும் வண்ணம், மண்டல அளவிலான சாராஸ் கண்காட்சிகள், வட்டார, மாவட்ட மற்றும் மாநில அளவிலான விற்பனைக் கண்காட்சிகள், கல்லூரிச் சந்தைகள் போன்றவை நடத்தப்பட்டு வருகிறது.
மகளிர் சுய உதவி குழு
அந்த வகையில் இணைய வழி விற்பனையில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை விற்பனை . Amazon, Flipkart, Meesho, India Mart, Gio Mart, Boom GM -முன்னணி நிறுவனங்களின் இ-வர்த்தக தனங்களில் இதுவரை 4,235 பொருட்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மதி அனுபவ அங்காடி (MaThi Experience Store), சிறுதானிய உணவகங்கள் (Millet Cafe), இயற்கை அங்காடி, மதி நடமாடும் விற்பனை வாகனம் (MaThi Express), அடுக்குமாடி விற்பனை சந்தை மற்றும் இ-வர்த்தக தளங்களின் வாயிலாக இதுவரை ரூ. 194.57 கோடி மதிப்பிலான சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
மகளிர்களுக்கு டிரோன் பயிற்சி
சுய உதவிக் குழுக்கள் இன்று பொருளாதார வளர்ச்சி பெற்று, வளமான வாழ்வாதாரத்தைப் பெற்று வருகின்றனர் என்றால் அது மிகையில்லை. பொதுமக்கள் அனைவரும் சுய உதவிக் குழுக்களின் தரமான தயாரிப்புப் பொருட்களை வாங்கி பயன்படுத்தி, சுய உதவிக் குழுக்களின் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒன்றிய அரசின் பங்களிப்புடன் டிரோன் மூலம் பயிர் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளும் தொழில் நுட்பத்தினை மகளிர் சுய உதவிக் குழு மகளிரிடையே அறிமுகப்படுத்தியுள்ளது.
விவசாய பணிக்கு டிரோன்
இதன் மூலம் தற்போது கிராமப்புறங்களில் வேலையாட்கள் கிடைப்பது குறைந்து வரும் நிலையில், டிரோன் மூலம் குறைந்த நேரத்தில் அதிகமான பரப்பளவில் மருந்து தெளிக்க பெரும் உதவியாக உள்ளது. மேலும் டிரோன் மூலம் மருந்து தெளிப்பதை சுய உதவிக் குழு மகளிருக்கு கற்றுத் தந்து, அதன் மூலம் அவர்களின் வருமானத்தை உயர்த்துவதற்காகவும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் டிரோன் இயக்குவதற்கான பயிற்சி பெற்ற சுய உதவிக் குழு மகளிர் தொடர்பான விபரங்கள் உழவர் கைபேசி செயலியில் தனியார் இயந்திர உரிமையாளர்கள் எனும் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.