- Home
- Tamil Nadu News
- நேற்று 10 இடங்களில் செஞ்சுரி அடித்த வெயில்! இன்று மழைக்கு வாய்ப்பா? வானிலை மையத்தின் லேட்டஸ் அப்டேட்!
நேற்று 10 இடங்களில் செஞ்சுரி அடித்த வெயில்! இன்று மழைக்கு வாய்ப்பா? வானிலை மையத்தின் லேட்டஸ் அப்டேட்!
தமிழகத்தில் பல இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெயில் சுட்டெரித்தது. இன்றைய வானிலை எப்படி இருக்கும் என்பதை பார்ப்போம்.

Tamilnadu heatwave
Heat Wave in Tamilnadu: தமிழகத்தில் கோடை வெயில் கடுமையாக சுட்டெரித்து வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது. நீர் சத்து உள்ள பொருட்களை அதிகம் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
100 Degree Heat
10 இடங்களில் வெயில் சதம்
இந்நிலையில் நேற்று தமிழகத்தில் 10 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. அதாவது அதிகபட்சமாக வேலூரில் 104 டிகிரி, கரூரில் 103 டிகிரி, ஈரோடு, திருச்சி, தஞ்சாவூரில் தலா 102 டிகிரி, சேலம், திருப்பத்தூர், மதுரை, திருத்தணி, தருமபுரியில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் மழை இருக்காம்! கூடவே ட்விஸ்ட் வைத்த வானிலை மையம்!
Tamilnadu rain
தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு
இந்நிலையில் தமிழகத்தில் இன்று எப்படி இருக்கும் என்பதை பார்ப்போம். தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
Chennai weather
சென்னை வானிலை நிலவரம்
அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Temperature in Tamilnadu
வெப்பநிலை உயரும்
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும் அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம் என தெரிவித்துள்ளது.