MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • திருநெல்வேலி
  • பள்ளிகளுக்கு ஜூலை 8ம் தேதி விடுமுறை! மாணவர்கள் கொண்டாட்டம்! சூப்பர் அறிவிப்பு!

பள்ளிகளுக்கு ஜூலை 8ம் தேதி விடுமுறை! மாணவர்கள் கொண்டாட்டம்! சூப்பர் அறிவிப்பு!

நெல்லையப்பர் தேரோட்டத்தை முன்னிட்டு திருநெல்வேலியில் ஜூலை 8ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளும், அரசு அலுவலங்களும் இயங்காது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

2 Min read
Author : Rayar A
Published : Jun 30 2025, 06:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Local Holiday For Nellai District On July 8
Image Credit : our own

Local Holiday For Nellai District On July 8

திருநெல்வேலியில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆனி திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஆனி திருவிழா இன்று (ஜூன் 30) கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நெல்லையப்பர் கோயில் தேரோட்டம் வருகிற 8ம் தேதி விமரிசையாக நடைபெற உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
நெல்லையப்பர் கோயில் தேரோட்டம்
Image Credit : GOOGLE

நெல்லையப்பர் கோயில் தேரோட்டம்

இந்நிலையில், நெல்லையப்பர் கோயில் தேரோட்டத்தையொட்டி திருநெல்வேலி மாவட்டத்துக்கு வரும் ஜூலை மாதம் 8ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமார் உத்தட்ரவிட்டுள்ளார். இது தொர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், ''திருநெல்வேலி மாவட்டம் மற்றும் வட்டம், திருநெல்வேலி நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயில் தேர் திருவிழா (ஆனி 24) 08.072025 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும். அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும். நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை (Local Holiday நாளாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.

33
உள்ளூர் விடுமுறை
Image Credit : Getty

உள்ளூர் விடுமுறை

மேற்குறிப்பிட்ட நாளில் அரசு பொதுத் தேர்வுகள் ஏதுமிருப்பின் பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், பொதுத் தேர்வு நடைபெறும் பள்ளிகள், பொதுத் தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது எனவும். மேற்படி 08.072025 உள்ளூர் விடுமுறை நாளன்று நடத்தப்படும் அரசு பொதுத் தேர்வுகள் அனைத்தும் எவ்வித மாறுதலுமின்றி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

வங்கிகளுக்கு விடுமுறை பொருந்தாது

மேற்படி உள்ளூர் விடுமுறையானது செலாவணி முறிச் சட்டம் 1881 (Under Negotiable Instrument Act 1881)-இன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது. மேலும், இம்மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு அரசு காப்புகள் (Government Securities) தொடர்பாக அவசரப் பணிகளை கவனிப்பதற்காக செயல்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

மேலே குறிப்பிடப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 19.07.2025 அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமார் தெரிவித்துள்ளார்'' என்று கூறப்பட்டுள்ளது.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
பள்ளிகள் விடுமுறை
தமிழ்நாடு அரசு
திருநெல்வேலி
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nellai Top 10 Place: ஊட்டி, கொடைக்கானலை விட்டு தள்ளுங்க.. கோடை வெயிலில் நெல்லையில் பார்க்க வேண்டிய சூப்பரான 10 இடங்கள்
Recommended image2
அட பாவிங்களா.! இதுக்குலாமா கொலை செய்வாங்க! வியாபாரியை காரில் கடத்தி குற்றாலத்தில் கதறவிட்டு கதையை முடித்த பயங்கரம்
Recommended image3
திருநெல்வேலி இன்று முக்கிய இடங்களில் மின்தடை அறிவிப்பு.! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க..!
Related Stories
Recommended image1
3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்குமா? தமிழக அரசின் அறிவிப்புக்காக காத்திருக்கும் பள்ளி மாணவர்கள்!
Recommended image2
சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் மாணவர்கள்.! பள்ளி அதிகாரிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved