- Home
- Tamil Nadu News
- 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்குமா? தமிழக அரசின் அறிவிப்புக்காக காத்திருக்கும் பள்ளி மாணவர்கள்!
3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்குமா? தமிழக அரசின் அறிவிப்புக்காக காத்திருக்கும் பள்ளி மாணவர்கள்!
திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஜூலை 7-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால், தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பள்ளி மாணவர்கள்
தமிழகத்தில் விடுமுறை என்றாலே பள்ளி மாணவர்களுக்கு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான். அதுவும் தொடர் விடுமுறை என்றால் சொல்லவே வேண்டாம். இந்நிலையில் தமிழகத்தில் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ம் தேதி பள்ளிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. என்னதான் 40 நாட்கள் கோடை விடுமுறை விட்டாலும் அடுத்த விடுமுறை எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பில் பள்ளி மாணவர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அதுமட்டுமல்ல உள்ளூர் விடுமுறை ஏதாவது கிடைக்குமா என்று எதிர்ப்பார்ப்பில் உள்ள மாணவர்களுக்கு குட்நியூஸ் செய்தி ஒன்று காத்துக்கொண்டிருக்கிறது.
திருச்செந்தூர் முருகன் கோவில்
தமிழகத்தில் அரசு விடுமுறை தவிர்த்து கோவில் திருவிழாக்கள், கும்பாபிஷேகங்கள், மசூதி, தேவாலயங்களில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே விடுமுறை வழங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடானது திருச்செந்தூர் முருகன் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு ஜூலை 7-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
ஜூலை 7-ம் தேதி மகா கும்பாபிஷேகம்
இதற்கான திருப்பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. ஏற்கனவே ராஜகோபுர பணிகள் முடிவடைந்துவிட்டன. விமான தளத்தில் உள்ள மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள், நடராஜர் ஆகிய விமான கலசங்களில் தங்க தகடு பதிக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. கும்பாபிஷேக விழாவிற்காக ராஜகோபுரம் கீழ்பகுதியில் பிரமாண்ட யாகசாலை அமைக்கும் பணிகளும் நடைபெறுகின்றன. 8000 சதுர அடியில் யாக சாலையும், 2000 அடியில் பக்தர்கள் அமர்ந்து யாகசாலை பூஜையை காணும் வகையில் கேலரியும் அமைக்கப்படுகிறது. யாகசாலையில் 76 யாக குண்டங்கள் அமைக்கப்படுகின்றன. ஜூலை 1-ம் தேதி யாகசாலை பூஜை தொடங்குகிறது.
ஜூலை 7-ம் தேதி உள்ளூர் விடுமுறை?
இந்நிலையில் ஜூலை 7-ம் தேதி திருச்செந்தூர் முருகன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெறும் நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் பள்ளி மாணவர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சேகர்பாபு: மருதமலை, பழனி உள்ளிட்டவை போல திருச்செந்தூர் முருகன் கோயிலிலும் தமிழில் கும்பாஷேகம் நடைபெறும். மேலும், கும்பாபிஷேகத்தை ஒட்டி உள்ளூர் விடுமுறையானது தேவை இருப்பின், முதல்வர் உள்ளிட்டோருடன் ஆலோசித்த பின்பு அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். விரைவில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை தொடர்பான அறிவிப்பு வெளியாக உள்ளதால் பள்ளி மாணவர்கள் குஷியில் துள்ளிக்குதிக்கின்றனர்.
3 நாட்கள் தொடர் விடுமுறை
ஜூலை 6-ம் தேதி வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மொஹரம் பண்டிகை வருவதால் அன்றைய தினம் விடுமுறை. அதேபோல் ஜூலை 7-ம் தேதி திருச்செந்தூர் முருகன் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கும் பட்சத்தில் அந்த மாவட்டத்திற்கு மட்டும் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே அனைத்து சனி, ஞாயிறு விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.