நாட்டின் மிகப்பெரிய ரயில் சந்திப்பு நிலையம் எது தெரியுமா? 2வது இடத்தில் நம்ப மாம்பழம் சிட்டி
நாட்டின் மிகப்பெரிய பொது போக்குவரத்து சேவை துறைகளில் ஒன்றாக ரயில்வே உள்ள நிலையில், நாட்டின் பெரிய சந்திப்பு நிலையம் பற்றி அறிந்து கொள்வோம்.
Largest Railway Junction
நாம் ரயிலில் பயணம் செய்யும் போது, பல ரயில் நிலையங்களை பார்த்திருப்போம். இவற்றில் சில சந்திப்புகளும் அடங்கும். ஒரு சந்திப்பு என்பது இரண்டு அல்லது மூன்று ரயில்கள் பிரிந்து வெவ்வேறு திசைகளில் பயணிக்கும் இடம். அத்தகைய நிலையங்களின் பெயரின் இறுதியில் சந்திப்பு என்று எழுதப்பட்டிருக்கும். நமது இந்தியாவின் மிகப்பெரிய ரயில் சந்திப்பு எங்கு உள்ளது என்பதை தெரிந்து கொள்வோம். ஏனெனில் அங்கிருந்து நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. நீங்கள் செல்ல விரும்பும் எந்த இடத்திற்கும் அங்கிருந்து ரயிலில் செல்லலாம்.
Madura Railway Junction
மதுராவில் 10 நடைமேடைகள்
பொதுவாக, நாட்டின் மிகப்பெரிய ரயில் சந்திப்பு நிலையம் என்றாலே சென்னை, மும்பை, டெல்லி மற்றும் கொல்கத்தா போன்ற ரயில் நிலையங்கள் தான் நினைவுக்கு வரும். ஆனால் அதெல்லாம் இல்லை. வட மத்திய ரயில்வேயின் கீழ் உள்ள மதுரா ரயில் சந்திப்பு நிலையம் தான் நமது நாட்டின் மிகப்பெரிய ரயில் சந்திப்பு நிலையம் என்று அறியப்படுகிறது. இந்த ரயில் நிலையத்தில் உள்ள 10 நடைமேடைகள் வழியாக இரவும், பகலும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. மதுரா சந்திப்பில் இருந்து ரயில்கள் ஏழு வழித்தடங்களாகப் பிரிகின்றன.
Railway Juction
நாட்டின் ஒவ்வொரு நகரமும் இங்கிருந்து இணைக்கப்பட்டுள்ளது. 1875ஆம் ஆண்டு இந்தச் சந்திப்பில் முதன்முறையாக ரயில் ஓடியது. மதுராவில் இருந்து பிருந்தாவன் வரையிலான 11 கிமீ நீளமுள்ள மீட்டர் கேட் ரயில் பாதை திறக்கப்பட்ட பிறகு, இங்கிருந்து செல்லும் வழிகள் படிப்படியாக அதிகரித்தன. சுதந்திரத்திற்குப் பிறகு இது மிகப்பெரிய சந்திப்பாக மாறியது.
Salem Railway Junction
சேலம் இரண்டாவது இடம்
மதுராவிற்கு அடுத்தபடியாக நாட்டின் இரண்டாவது பெரிய ரயில் சந்திப்பு சேலம் ஆகும். இது தமிழ்நாட்டில் அமைந்துள்ளது. இங்கிருந்து நெல்லை, பெங்களூரு, சென்னை, கோவை உட்பட ரயில் ஆறு தடங்களாகப் பிரிகிறது. மேலும் இந்த ரயில் நிலையம் சென்னை, கோவை, கேரளா மாநிலம் செல்லும் அனைத்து ரயில்களின் முக்கிய சந்திப்பு நிலையமாக விலங்குகிறது.
Railway Station
சேலத்திற்கு அடுத்தபடியாக விஜயவாடா மற்றும் பரேலி சந்திப்புகள் மூன்றாவது இடத்தில் உள்ளன. இங்கிருந்து ரயில்கள் 5 வழித்தடங்களாக பிரிக்கப்படுகின்றன. அதிக டிக்கெட் விற்பனை செய்யும் நிலையம் மதுரா. இந்த சந்திப்பின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு இங்கு அதிநவீன வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. நாட்டிலேயே மிகவும் அழகுபடுத்தப்பட்ட நிலையமாக இது உருவாக்கப்படுகிறது.