- Home
- Tamil Nadu News
- நீலகிரி
- கொட்டித் தீர்க்கப் போகும் கனமழை! பள்ளிகளுக்கு விடுமுறை! மாணவர்களுக்கு குட் நியூஸ்!
கொட்டித் தீர்க்கப் போகும் கனமழை! பள்ளிகளுக்கு விடுமுறை! மாணவர்களுக்கு குட் நியூஸ்!
நீலகிரி மாவட்டத்தில் நாளை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்ட நிலையில், பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Schools Remain Closed in Nilgiris District Tomorrow
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக வெயில் கடுமையாக வாட்டியது. சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம், நெல்லை என அனைத்து இடங்களிலும் வெயில் வாட்டி வதைத்தது. வெயில் எப்போது ஓயும் என மக்கள் எதிர்பார்த்த நிலையில் தென்மேற்கு பருவமழை காரணமாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை கொட்டியது.
தமிழ்நாட்டில் தென் மேற்கு பருவ மழை
கோவை, தென்காசி மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. நீலகிரி மாவட்டத்தில் விடாமல் கொட்டிய கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. அங்குள்ள சுற்றுலாத்தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. தொடர் கனமழை காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் மழை ஓய்ந்து மீண்டும் பல இடங்களில் வெயில் கொளுத்தி எடுத்தது.
நீலகிரி மாவட்டத்தில் ரெட் அலர்ட்
இந்நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தென் மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமாகியுள்ளது. குறிப்பாக தென்காசி, நெல்லை, தேனி, கோவை, நீலகிரி என மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களி நல்ல மழை பெய்து வருகிறது. நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான ‛ஆரஞ்ச் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை (ஜூன் 14) மற்றும் நாளை மறுநாள் (ஜூன் 15) என்று 2 நாட்கள் நீலகிரி மாவட்டத்துக்கு அதி கனமழைக்கான ‛ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய பேரிடர் மீட்பு படையினர்
இந்த இரண்டு நாட்களும் நீலகிரியில் பலத்த மழை கொட்டித் தீர்க்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்றுள்ளனர். ஆற்றோரம் உள்ள மக்கள், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பள்ளிகளுக்கு விடுமுறை
மேலும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் நீலகிரி மாவட்டத்தில் நாளை (ஜூன் 14) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளை சனிக்கிழமை என்பதால் அரசு பள்ளிகளுக்கு ஏற்கெனவே விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.
ஆகையால் தனியார் பள்ளிகளும் நாளை விடுமுறை விட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அரசின் உத்தரவை மீறி பள்ளிகளை திறப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.