- Home
- Tamil Nadu News
- மதுரை
- ''இந்தியாவின் இரும்பு மனிதர் அமித்ஷா'' - சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் புகழாரம்!!
''இந்தியாவின் இரும்பு மனிதர் அமித்ஷா'' - சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் புகழாரம்!!
இந்தியாவின் இரும்பு மனிதராக, சர்தார் வல்லபாய் பட்டேலாக அமித் ஷா இருக்கிறார் என்று முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி. உதய குமார் வீடியோவில் தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சியின் அவலங்களை மக்களிடத்தில் எடுத்துச் சொல்ல வேண்டும்
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறப்பட்டுள்ளதாவது:
கழக அம்மா பேரவையின் சார்பில் 7 வது வாரத் திண்ணைப் பிரச்சாரம் நாளை வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இந்த திண்ணைப் பிரச்சாரத்தில் திமுக ஆட்சியின் அவலங்களை மக்களிடத்தில் எடுத்துச் சொல்ல வேண்டும்
அதிமுக- பாஜக கூட்டணி.! அண்ணாமலைக்கு அவசர அழைப்பு விடுத்த அமித்ஷா- காரணம் என்ன.?
கடனில் மூழ்க வைத்து ஸ்டாலின் ஒரு வெற்று விளம்பரம்
தமிழகத்தை கடனில் மூழ்க வைத்து ஸ்டாலின் ஒரு வெற்று விளம்பரம் பட்ஜெட்டை தாக்கல் செய்து உள்ளார். தமிழகத்திற்கு எதிராக நடைபெறும் அநீதிகளை எதிர்த்து இந்த திண்ணை பிரச்சாரம் மூலம் மக்களிடம் நீதி கேட்க வேண்டும். ஸ்டாலின் மாடல் திமுக அரசு விளம்பர அரசாக தான் உள்ளது. இன்றைக்கு தமிழக மட்டுமல்ல இந்தியாவின் தலைப்புச் செய்தியாக ஒரு விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.
அதிமுக போடும் தப்பான கூட்டணிக் கணக்கு.! சட்டப்பேரவையில் சுவாரஸ்ய விவாதம்