MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மதுரை
  • தொடர் வெற்றிக்கு தகுதியானவரே ஒரு சிறந்த அரசியல்வாதி! - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு!

தொடர் வெற்றிக்கு தகுதியானவரே ஒரு சிறந்த அரசியல்வாதி! - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு!

அரசியல்வாதியின் நிரந்தர சக்தி என்பது தேர்தலில் வெற்றி பெறுவது தான் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 

1 Min read
Author : Dinesh TG
Published : Apr 10 2023, 10:38 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

மதுரை மத்திய சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு நிதிஅமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார். பின்னர் மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் உறுப்பினர் சேர்க்கை குறித்து பகுதி வட்ட கழக கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், எந்தவொரு இயக்கத்திற்கும் உள்ள முக்கிய திறன் தேர்தலில் வெற்றி பெறுவது தான். அரசியல் இயக்கம் என்றால் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றார்.

24

ஒரு அரசியல் கட்சியாக நாம் நம் கொள்கை தத்துவத்தின் அடிப்படையில் வெற்றி பெற்று, ஆட்சி அமைத்து சட்ட திட்டங்களை நிதிகளை மக்களின் நலனுக்கு தீட்டி செயல்படுத்தினால் தான் மக்களிடம் வெற்றி பெற முடியும்.

தேர்தல் வெற்றி பெறுவது தான் இயக்கத்தின் வெற்றி. அரசியல்வாதியின் நிரந்தர சக்தி தேர்தலில் வெற்றி பெறுவது தான் என்றார்.
 

34

மேலும், தேர்தலில் வென்று கொண்டே இருப்பது தான் நிரந்தர சக்தி. தோல்வி என்ற வார்த்தையே காணாத பெருமை நம் மதுரை மத்திய தொகுதிக்கு சேரும். 2014ம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற தொகுதியில் மதுரையில் இரண்டே தொகுதிளில் வெற்றி பெற்றோம். அதில் ஒன்று மதுரை மத்திய தொகுதி. 2019 நாடாளுமன்ற தேர்தலில் கூடுதல் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம். மக்களிடம் பாசம் பிணைப்பு இருந்தால் தொடர்ந்து வெற்றி பெறுவோம்

அண்ணாமலை என்ன ஆண்டவனே நினைத்தாலும் நடத்த முடியாது..! பாஜக மாநில தலைவருக்கு எதிராக சீறும் செல்லூர் ராஜூ
 

44

இன்னும் கூடுதல் வாக்காளர்களை சேர்க்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. எங்கு பலவீனமாக உள்ளோம் என்பதை கண்டறிந்து வலுப்படுத்த வேண்டும்.கழகத்தின் தத்துவத்திற்கு ஏற்ப உறுப்பினர்களை சேர்ப்பது தான் சிறப்பான முயற்சி தரும் என பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

About the Author

DT
Dinesh TG

Latest Videos
Recommended Stories
Recommended image1
மதுரை LIC அலுவலக தீ விபத்தில் திடீர் திருப்பம்.. பெண் மேலாளரை உயிரோடு எரித்து கொன்றது அம்பலம்!
Recommended image2
நிக்காம ரத்தமா போகுது.. என்னை காப்பாத்துங்கப்பா! வெங்காரம் சாப்பிட்ட கல்லூரி மாணவியின் கடைசி நிமிடக் கதறல்! நடந்தது என்ன?
Recommended image3
தேசிய நெடுஞ்சாலையில் அதிர்ச்சி.. பயங்கர சத்தத்துடன் வெடித்த பேருந்து.. அலறிய 55 பயணிகள் நிலை என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved