- Home
- Tamil Nadu News
- சென்னை
- விஜய் தான் அடுத்த முதல்வர்! எங்க வழி தனி வழி! சீமானை தொடர்ந்து எடப்பாடியை நோஸ் கட் செய்த தவெக!
விஜய் தான் அடுத்த முதல்வர்! எங்க வழி தனி வழி! சீமானை தொடர்ந்து எடப்பாடியை நோஸ் கட் செய்த தவெக!
அதிமுக கூட்டணிக்கு வரும்படி எடப்பாடி பழனிசாமி விடுத்த கூட்டணி அழைப்பை விஜய்யும், சீமானும் நிராகரித்துள்ளனர். இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

Seeman, Vijay Reject Edappadi Palaniswami Request
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன. ஆளும் கட்சியான திமுக தங்கள் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக மற்றும் இடதுசாரிகளை தக்க வைத்துக் கொள்ள தயாராக உள்ளது. எதிர்க்கட்சியான அதிமுகவை பொறுத்தவரை பாஜகவை கூட்டணியில் இணைத்துள்ளது.
பாஜகவுக்கு எதிராக பேசிய எடப்பாடி பழனிசாமி
அதிமுக தலைமையில் இந்த கூட்டணி அமைக்கப்பட்டது என்று கூறப்பட்டாலும் பாஜகவே அனைத்து முடிவுகளையும் எடுப்பதாகவும் அமித்ஷா சொல்வதைத் தான் எடப்பாடி பழனிசாமி கேட்க வேண்டும் என்று திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் கிண்டலடித்து வருகின்றன. இதனால் பொங்கியெழுந்த எடப்பாடி பழனிசாமி, ''ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஏமாளிகள் அல்ல. கூட்டணி வேண்டும் என்றால் வேண்டும். வேண்டாம் என்றால் வேண்டாம்'' என காட்டமாக பேசினார்.
விஜய், சீமானுக்கு எடப்பாடி அழைப்பு
இப்படியாக ஒருபக்கம் அதிமுக, பாஜக கூட்டணி ஊசலாடி வரும் நிலையில், திமுகவுக்கு எதிராக உள்ள கட்சிகள் தவெக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணைய வேண்டும். திமுகவுக்கு எதிரான அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை ஏதும் நடைபெறவில்லை எனவும் விளக்கம் அளித்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமியின் அழைப்பை சீமானின் நாம் தமிழர் கட்சியும், விஜய்யின் தவெகவும் நிராகரித்துள்ளன.
தமிழ்நாட்டில் தேசிய கட்சிகள் எதற்காக?
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,, நாம் தமிழர் கட்சி சட்டப்பேரவை தேர்தலில் தனித்துப் போட்டியிடும். சில கட்சிகள் ஓரணியில் நிற்கின்றன. நாங்கள் மட்டும் ஓரணியாக இல்லாமல் ஒரே அணியாக தனித்து நிற்கிறோம்'' என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ''தீமையை வைத்து தீமையை எப்படி அழிக்க முடியும்? தமிழ்நாட்டில் தேசிய கட்சிகள் எதற்காக? தேசிய கட்சிகளான பாஜகவும், காங்கிரசும் தமிழ்நாட்டுக்கு எதாவது நன்மையை செய்துள்ளதா? புதிய கல்விக்கொள்கை, நீட் தேர்வு என பல்வேறு விஷயங்கள் தேசிய கட்சிகள் தமிழ்நாட்டுக்கு எதிராக நிற்கின்றன'' என்று தெரிவித்தார்.
விஜய்யும் நிராகரிப்பு
இதேபோல் தவெகவும் விஜய் தான் அடுத்த முதல்வர் என்று கூறி எடப்பாடி பழனிசாமியின் அழைப்பை நிராகரித்துள்ளது. தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகம் மாபெரும் வெற்றி பெற்று வரலாறு படைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்''தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில அளவிலான மாபெரும் கொள்கை விளக்க முதல் பொதுக்கூட்டம், சேலம், போஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் தலைமைக் கழக நிர்வாகிகள் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினர்.
மாற்றத்தை விரும்பும் தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், மக்கள் விரும்பும் முதல்-அமைச்சர் வேட்பாளர் வெற்றித் தலைவர் விஜய் தலைமையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம், மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, புதிய வரலாறு படைக்கும்.