- Home
- Tamil Nadu News
- சென்னை
- சென்னையில் அதிர்ச்சி! இரண்டு மாநகரப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்! பயணிகளின் நிலை என்ன?
சென்னையில் அதிர்ச்சி! இரண்டு மாநகரப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்! பயணிகளின் நிலை என்ன?
Chennai MTC Bus Accident: சென்னையின் வேளச்சேரி பகுதியில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மாநகர பேருந்து ஒன்று, எதிரே வந்த மற்றொரு பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

சென்னை மாநகர பேருந்து
சென்னையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதிகளில் ஒன்று வேளச்சேரி. இந்நிலையில் பொதுமக்கள் அனைவரும் வழக்கம் போல இருசக்கர வாகனம், கார், பேருந்தில் வேலைக்கு செல்பவர்கள் சென்றுக்கொண்டிருந்தனர். இந்நிலையில் வேளச்சேரி அருகே பயணிகளை ஏற்றிக்கொண்டு தடம் எண் வி51 தி.நகர் - கிளாம்பாக்கம் மாநகர பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அதே சமயம் எதிரில் எம் 51வி, வேளச்சேரி- கொளத்தூர் நோக்கி மாநகர பேருந்து பயணிகளுடன் வந்துகொண்டிருந்தது.
நேருக்குநேர் மோதல்
இந்நிலையில், பேருந்து தண்டீஸ்வரம் அருகே வந்துகொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த மற்றொரு அரசு பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தை அடுத்து பேருந்தில் இருந்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர்.
போலீஸ் விசாரணை
இந்த விபத்தில் ஓட்டுநர் மற்றும் 7க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தை அடுத்து அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.