1991க்கு பிறகு சென்னையில்.. 20 வருடத்தில் இல்லாத மழை.. புள்ளி விவரத்தோடு விளக்கம் தந்த தமிழ்நாடு வெதர்மேன்
1991, 1996க்கு பிறகு இப்போது 2023ல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல நூற்றாண்டுகளாக வரலாறு காணாத மழை பெய்துள்ளது.
சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இடி மின்னல், சூறைக்காற்றுடன் பெய்த கனமழை காரணமாக சென்னையில் பிரதான சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. சுரங்கப்பாதைகளில் குளம்போல் மழைநீர் தேங்கியுள்ளது. மரங்கள் மற்றும் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
1991, 1996 மற்றும் இப்போது 2023. கடந்த 200 ஆண்டுகளில் 150 மிமீ பதிவான ஆண்டுகள் ஆகும். வேறு எந்த ஆண்டும் இதுபோன்ற மழை பெய்யவில்லை. ஜூன் மாத கனமழை மிகவும் அரிதானது ஆகும். 3வது முறையாக ஜூன் மாதத்தில் மழைக்காக பள்ளிகள் மூடப்படுகின்றன. 1996 சாதனை இதுவரை முறியடிக்கப்படவில்லை.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் தென்மேற்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் சூறைகாற்றுடன் நள்ளிரவு முதல் கனமழை பெய்தது. கிண்டி, மீனம்பாக்கம், மாம்பலம், சைதாப்பேட்டை, குரோம்பேட்டை, எழும்பூர், சேத்துப்பட்டு, நூங்கம்பாக்கம், வேளச்சேரி, ஈக்காட்டுதாங்கல் உள்பட சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.
3 வது முறையாக ஜூன் மாதத்தில் மழைக்காக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இன்று சென்னையில் 150+ மி.மீ. உண்மையில் அரிதானது, ஜூன் மாதத்தில் மிகவும் அரிதானது என்று தமிழ்நாடு வெதர்மேன் ஜான் பிரதீப் குறிப்பிட்டுள்ளார்.
27 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் கொட்டிய மழை.. 2k கிட்ஸ் அதிர்ஷ்டசாலிகள் எப்படி.? வெதர்மேன் விளக்கம்