- Home
- Tamil Nadu News
- சென்னை
- ஞாயிற்றுக்கிழமை சென்னை புறநகரில் மின்தடை! ஷாக் கொடுத்த மின்வாரியம்! எந்தெந்த இடங்கள்?
ஞாயிற்றுக்கிழமை சென்னை புறநகரில் மின்தடை! ஷாக் கொடுத்த மின்வாரியம்! எந்தெந்த இடங்கள்?
நாளை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளிலும் சென்னை புறநகர் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.

Power shutdown in Chennai suburbs
தமிழ்நாடு முழுவதும் மின்வாரியம் மின்சார சேவை வழங்கி வரும் நிலையில், மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் சில குறிப்பிட்ட சில இடங்களில் மின்தடை செய்யப்படும். இது குறித்து மின்சார வாரியம் முன்கூட்டியே தெரிவித்து விடும். இந்நிலையில், நாளை (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாளிலும் சென்னையின் புறநகர் பகுதியில் மின் தடை செய்யப்பட உள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்
அதாவது அம்பத்துார் தொழிற்பேட்டை பகுதியில் பி - பிளாக், நியூ டைனி செக்டர், 2வது பிரதான பகுதி, சி.டி.எச்., சாலை, மேனாம்பேடு சாலை, கோச்சர் அப்பார்ட்மென்ட், பழைய டைனி செக்டர் ஒன்றாவது பிரதான சாலை, ஏ.டி.சி., சாலை, 2வது குறுக்கு தெரு, 3வது தெரு செக்டார்-, கோரமெண்டல் டவுன்,7வது தெரு செக்டர் 3, ஆவின் சாலை கூட்டுப் பகுதி, சிட்கோ தொழிற்பேட்டை வடக்கு, 7வது மற்றும் 8வது தெரு, சிட்கோ தொழிற்பேட்டை வடக்கு கட்டம், குக்சன் சாலை ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படும் என்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
எத்தனை மணி நேரம் மின்தடை இருக்கும்?
மேற்கண்ட இடங்களில் ஒரு சில பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை இருக்கும். ஒரு சில பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும். பின்பு பராமரிப்பு பணிகள் நிறைவடைந்தவுடன் மின்சார சேவை வழங்கப்படும்.
முன்னெச்சரிக்கையாக மின்சாரம் பொருட்கள் பழுதாவதை தடுக்கும் வகையில் இந்த மின்தடை செய்யப்படுவதாகவும் பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் மின்சார வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மின் தடை செய்யப்படுவது ஏன்?
பொதுவாக மின் நிலையங்கள், துணை மின் நிலையங்கள் பராமரிப்பு பணி காரணமாக ஞாயிற்றுக்கிழமை தவிர வாரத்தின் மற்ற நாட்களில் மின்தடை செய்யப்படும். குறிப்பாக செவ்வாய்க்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் அதிக மின்தடை இருக்கும்.
ஆனால் இந்த முறை ஞாயிற்றுக்கிழமை அனைவரும் வீட்டில் இருக்கும் விடுமுறை நாளில் மின் தடை செய்யப்படுவது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதுவும் சென்னை புறநகர் பகுதியில் விடுமுறை நாளில் மின்தடை செய்யப்படுவது பொதுமக்களுக்கு கூடுதல் ஷாக் அளித்துள்ளது.