- Home
- Tamil Nadu News
- சென்னை
- சென்னை விமான நிலையத்தில் அலறிய பயணிகள்! 161 பேர் உயிர் தப்பியது எப்படி? பரபரப்பு தகவல்!
சென்னை விமான நிலையத்தில் அலறிய பயணிகள்! 161 பேர் உயிர் தப்பியது எப்படி? பரபரப்பு தகவல்!
சென்னை விமான நிலையத்தில் இருந்து மும்பை புறப்பட்ட இண்டிகோ விமானத்தின் டயர் ஓடுபாதையில் வெடித்ததால் பயணிகள் பீதியடைந்தனர்.

Chennai Airport
Chennai Airport Flight Tyre Burst: தமிழகத்தில் பல்வேறு விமான நிலையங்கள் இருந்தாலும் எப்போதும் பரபரப்பாக காணப்படும் விமான நிலையம் சென்னை விமான நிலையம். இங்கு இருந்து பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலத்திற்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை 158 பயணிகள், 8 விமான ஊழியர்கள் என மொத்தம் 166 பேருடன் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மும்பை புறப்பட்டது.
இதையும் படிங்க: தப்பி தவறி கூட வெளியே போயிடாதீங்க! 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் உயரப்போகுதாம்! வானிலை ஷாக் தகவல்!
indigo airlines
இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் டயர் வெடித்தது
அப்போது, ஓடுதளத்தில் வேகமாக சென்றுக்கொண்டிருந்த போது திடீரென விமானத்தில் பின்பக்க டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால், நிலைத்தடுமாறிய விமானம் ஓடுபாதையில் குலுங்கியபடி தாறுமாறாக ஓடியதால் விமானத்தில் இருந்த பயணிகள் பயத்தில் அலறி கூச்சலிட்டனர். உடனே சாதுரியமாக செயல்பட்ட விமானி, விமானத்தை உடனடியாக ஓடுபாதை நிறுத்தியதால் பெரும் உயிர் தவிர்க்கப்பட்டது.
இதையும் படிங்க: இந்த 3 பிரபல ரவுடிகள் தலைநகர் சென்னைக்குள் நுழைய தடை! யாரெல்லாம் தெரியுமா?
Plane Tyre burst
விமானியால் உயிர் தப்பிய 161 பேர்
இதையடுத்து, விமானத்தின் நிலை குறித்து உடனே கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, உடனடியாக இழுவை வண்டி வரவழைக்கப்பட்டு விமானம் இழுத்துச் செல்லப்பட்டது. பின்னர், பயணிகள் யாரையும் இறக்கிவிடாமல் வெடித்த டயர் மாற்றப்பட்டு இரண்டரை மணிநேரம் தாமதமாக விமானம் மும்பைக்கு புறப்பட்டது. இந்த சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.