MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தப்பி தவறி கூட வெளியே போயிடாதீங்க! 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் உயரப்போகுதாம்! வானிலை ஷாக் தகவல்!

தப்பி தவறி கூட வெளியே போயிடாதீங்க! 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் உயரப்போகுதாம்! வானிலை ஷாக் தகவல்!

தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு வெப்பம் அதிகரிக்கும். இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

2 Min read
Author : vinoth kumar
| Updated : Apr 26 2025, 04:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Tamilnadu Rain

Tamilnadu Rain

Meteorological Department warning: தமிழகத்தில்  அடுத்த சில தினங்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.  அதாவது தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

25
Rain with thunder and lightning

Rain with thunder and lightning

இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு

அதேபோல் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் ஏப்ரல் 28 முதல் மே 2ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இதையும் படிங்க: தமிழகத்தில் முதல் முறையாக! 3 ரவுடிகள் மீது அதிரடி! சென்னை நகர சட்டம் 51ஏ என்றால் என்ன?

35
heatwave

heatwave

அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

இன்று முதல் 30ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. எனினும், ஒருசில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை உயரக்கூடும்.

45
Tamilnadu heatwave

Tamilnadu heatwave

வெப்ப அளவின் வேறுபாடு:

இன்று மற்றும் நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். ஏப்ரல் 28 முதல் 30  வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

இன்று மற்றும் நாளை அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 2-4° செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:  அடிதூள்! முன்னாள் எம்எல்ஏ-க்களுக்கு ஓய்வூதியம் உயர்வு! எவ்வளவு தெரியுமா?

55
chennai weather update

chennai weather update

சென்னை வானிலை நிலவரம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாடு மழை
மழை செய்திகள்
வெப்ப அலை
கனமழை
கோடைக்காலம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தென் தமிழகத்தை ரவுண்டு கட்டப்போகும் மழை.. 'இந்த' 2 மாவட்ட மக்கள் உஷாரா இருங்க.. வானிலை அப்டேட்!
Recommended image2
4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. தமிழகத்தில் இன்று கனமழை கொட்டப்போகுது.. எங்கெல்லாம் தெரியுமா?
Recommended image3
திமுகவை சீண்டினால் தமிழ்நாடே பதிலடி கொடுக்கும்..! மதுரையில் கெத்து காட்டிய முதல்வர் ஸ்டாலின்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved