- Home
- Tamil Nadu News
- சென்னை
- சூப்பர் வாய்ப்பை தவறவிட்டுடாதீங்க.. ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல் இலவச பயிற்சி.! 100% வேலைவாய்ப்பு கன்பார்ம்!
சூப்பர் வாய்ப்பை தவறவிட்டுடாதீங்க.. ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல் இலவச பயிற்சி.! 100% வேலைவாய்ப்பு கன்பார்ம்!
100% வேலைவாய்ப்புடன் கூடிய கட்டணமில்லா பிளாஸ்டிக்ஸ் தொழில் நுட்ப திறன் பயிற்சிக்கு விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். CIPET மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் இணைந்து வழங்கும் இப்பயிற்சியில் உணவு, தங்குமிடம் இலவசம், உதவித்தொகையும் வழங்கப்படும்.

பிளாஸ்டிக்ஸ் தொழில் நுட்ப திறன் பயிற்சி
நூறு சதவீதம் வேலைவாய்ப்புடன் கூடிய கட்டணமில்லா பிளாஸ்டிக்ஸ் தொழில் நுட்ப திறன் பயிற்சி வகுப்பில் சேர்வதற்கான இணையம் வழியே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை மாவட்ட ஆட்சியர்
இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிக்கையில்: சென்னை மாவட்டத்தில் உள்ள மத்திய பெட்ரோகெமிக்கல்ஸ் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்வி நிறுவனம் (CIPET), பிளாஸ்டிக்ஸ் தொழில் நுட்ப பயிலகம் (IPT) தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகத்துடன் இணைந்து வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் 100% வேலைவாய்ப்புடன் கூடிய கட்டணமில்லா பிளாஸ்டிக்ஸ் தொழில் நுட்ப திறன் பயிற்சி வகுப்பில் சேர்வதற்கான இணையம் வழியே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சியின் பெயர்கள்
1. Machine Operator Plastics Processing
பயிற்சி காலம்- 2 மாதங்கள் (375 மணிநேரம்)
கல்வித் தகுதி- 8ஆம், 10ஆம், 12ஆம் வகுப்பு
2.Machine Operator Plastics Injection Moulding
பயிற்சி காலம் - 2 மாதங்கள் (375 மணிநேரம்)
கல்வித் தகுதி - /ITI/டிப்ளோமா/பட்டபடிப்பு படித்த இளைஞர்கள் (ஆண்/ பெண்) இருபாலரும்.
3. Machine Operator & Programmer Plastics CNC Milling
பயிற்சி காலம் - 2 மாதங்கள் (375 மணிநேரம்)
வயது வரம்பு- 18 வயது முதல் 35 வயது வரை
என்னென்ன தகுதிகள்
31.12.2025 அன்று விண்ணப்பதாரர் 18 வயது நிறைவு செய்து இருக்க வேண்டும். குறைந்த பட்சம் 8 ஆம் வகுப்பு தகுதியுடையவராக இருக்க வேண்டும். தொழில் பயிற்சி பெற வேண்டுவோர் இப்பயிற்சியில் சேரலாம். வேறு எந்த தொழில்பயிற்சி நிலையங்கள் மூலம் பயிற்சி பெறாதவராய் இருத்தல் வேண்டும். புதிய தொழில் துவங்குவோரும் இப்பயிற்சியில் சேரலாம். பயிற்சியில் சேர அசல் மற்றும் நகல் ஆவணகள் சமர்ப்பிக்க வேண்டும்.
8ஆம், 10ஆம் அல்லது 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (அசல்). பள்ளி பரிமாற்ற சான்றிதழ் நகல், சாதி சான்றிதழ் நகல் மற்றும் ஆதார் அட்டை (நகல்). வங்கி கணக்கு புத்தகம் (நகல்) மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்(5). பயிற்சி கட்டணம். உணவு மற்றும் தங்குமிடம் இலவசம். அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் உதவித்தொகையும் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
இப்பயிற்சி வகுப்புகளில் சேர விருப்பமுள்ளவர்கள் https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/செய்யவும். மேலும், விபரங்களுக்கு 9940188582 / 9841126297 / 7598145203 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

