- Home
- Tamil Nadu News
- சென்னை
- சூப்பர் அறிவிப்பு! சென்னை மெட்ரோ ரயிலில் நாளை இலவசமாக பயணிக்கலாம்! யாரெல்லாம் தெரியுமா?
சூப்பர் அறிவிப்பு! சென்னை மெட்ரோ ரயிலில் நாளை இலவசமாக பயணிக்கலாம்! யாரெல்லாம் தெரியுமா?
Chennai Metro Offers Free Travel for Football Fans: பிரேசில் லெஜண்ட்ஸ் மற்றும் இந்தியன் லெஜண்ட்ஸ் கால்பந்து போட்டிக்கு ஸ்பான்சர் செய்யப்பட்ட பயணச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு மெட்ரோவில் இலவசமாக பயணிக்கலாம்.

கால்பந்து போட்டி
பிரேசில் லெஜண்ட்ஸ் அணிக்கும் இந்தியன் லெஜண்ட்ஸ் அணிக்கும் இடையிலான கால்பந்து போட்டிக்கான ஸ்பான்சர் செய்யப்பட்ட பயணச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு தடையில்லா மெட்ரோ பயணம் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்
இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:-புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி. இராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்திற்குஅருகில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிரேசில் லெஜண்ட்ஸ் அணிக்கும் இந்தியன் லெஜண்ட்ஸ் அணிக்கும் இடையில் கால்பந்து போட்டி நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் ரசிகர்களுக்கு தடையில்லா போக்குவரத்தை வழங்குவதற்காக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் Football Plus Professional Soccer Academy நிறுவனத்துடன் இணைந்து கட்டணமில்லா பயணத்தை வழங்குவதற்காக உடன்பாடு செய்துள்ளது.
இதையும் படிங்க: நீட் தேர்வு அச்சம்! சென்னை மாணவி தூக்கிட்டு தற்கொலை! நெஞ்சில் அடித்து கதறும் பெற்றோர்!
மெட்ரோ ரயில்
கால்பந்து போட்டிக்கான பயணச்சீட்டுகளை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இந்த ஸ்பான்சர்செய்யப்பட்ட பிரத்யேக மெட்ரோ பயணம் வழங்கப்படும். இதை பயன்படுத்தி பயணிகள் எந்த ஒரு மெட்ரோஇரயில் நிலையத்தில் இருந்தும் நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு மிக அருகில் உள்ள புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி. இராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்திற்கும் சென்று திரும்ப முடியும்.
மெட்ரோ ரயில் இலவச பயணம்
கால்பந்து போட்டிக்கு வருபவர்கள் போட்டிக்கான நுழைவுச் சீட்டுகளில் உள்ள தனித்துவமான QR குறியீட்டை தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம். இந்த சிறப்புசலுகையை ஒரு சுற்றுப் பயணத்திற்கு (2 நுழைவு மற்றும் 2 வெளியேறுதல்) பயன்படுத்தலாம். ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணையின் படி நாளை மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.