- Home
- Tamil Nadu News
- சென்னை
- குஷியில் அமைச்சர் ஐ.பெரியசாமி! 17 ஆண்டு கால வழக்கில் இருந்து ஒரு வழியாக விடுதலை!
குஷியில் அமைச்சர் ஐ.பெரியசாமி! 17 ஆண்டு கால வழக்கில் இருந்து ஒரு வழியாக விடுதலை!
அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

Minister I. Periyasamy
அமைச்சர் ஐ .பெரியசாமி மீது புகார்
கடந்த 2008-ம் ஆண்டு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை அப்போதைய ஐபிஎஸ் அதிகாரி ஜாபர்சேட்டின் மனைவி பர்வீன், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் உள்ளிட்டோருக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது வீட்டுவசதி வாரிய அமைச்சராக பதவி வகித்த ஐ.பெரியசாமி மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து அதிமுக ஆட்சிக்காலத்தில் 2012ம் ஆண்டு அமைச்சர் ஐ.பெரியசாமி, ஜாபர்சேட், அவரது மனைவி பர்வீன் உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
Justice Anand venkatesh
லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு
இந்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து சென்னை எம்.பி, எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார். தொடர்ந்து அவர் மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு மாற்றப்பட்டார்.
இதையும் படிங்க: இபிஎஸ் அணியில் அதிகரித்து வரும் பாஜக ஆதரவாளர்கள்! இது அதிமுகவின் எதிர்காலத்துக்கு நல்லதா? KC.பழனிசாமி பகீர்
i periyasamy Case
சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை
இதனிடையே கடந்த 2013ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்ததை ரத்து செய்ய வேண்டுமென ஜாபர் சேட்டின் மனைவி உள்ளிட்டோர் மனுதாக்கல் செய்தனர். அதன்படி, அமைச்சர் ஐ.பெரியசாமி தவிர மற்றவர்கள் மீதான வழக்கை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் ரத்து செய்து ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
இதையும் படிங்க:கெஸ்ட் ரோல் அரசியல்வாதி சைதை துரைசாமி! அதிமுக இப்படி கொதிக்க இதுதான் காரணமா?
Chennai High Court
ஐ.பெரியசாமி விடுதலை
அமைச்சர் மீதான வழக்கு எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான புகாரை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது. இதனை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஐ.பெரியசாமி மனுத்தாக்கல் செய்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன், ஐ. பெரியசாமி மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். அமைச்சர் என்பதால் வழக்கு தொடர ஆளுநர் மட்டுமே அனுமதி அளிக்க முடியும் எனும்போது, சபாநாயகர் அனுமதி அளித்தது தவறு எனவும் நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.