- Home
- Tamil Nadu News
- சென்னை
- செயலிழந்த பிரேக்! அலறி கூச்சலிட்ட 314 பயணிகள்! சென்னை விமான நிலையத்தில் திக்.. திக்.. நிமிடங்கள்!
செயலிழந்த பிரேக்! அலறி கூச்சலிட்ட 314 பயணிகள்! சென்னை விமான நிலையத்தில் திக்.. திக்.. நிமிடங்கள்!
தோகாவிலிருந்து சென்னை வந்த கத்தார் ஏர்லைன்ஸ் விமானத்தின் பிரேக் சிஸ்டம் செயலிழந்ததால், விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 326 பேருடன் வந்த விமானத்தை விமானி சாதுர்யமாக தரையிறக்கினார்.

qatar airways flight
Brake system failure qatar airways: கத்தார் நாட்டு தலைநகர் தோகாவில் இருந்து கத்தார் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று அதிகாலை 314 பயணிகள், 12 விமான ஊழியர்கள் என மொத்தம் 326 பேருடன் சென்னை விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தது.
Chennai Airport
கத்தார் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம்
இந்த விமானம் சரியான அதிகாலை 2.40 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டும். தரையிறங்க தயாராக இருந்த போது விமானி, விமானத்தில் இயந்திரங்கள் அனைத்தையும் சரி பார்த்தார். அப்போது விமானத்தின் பிரேக் சிஸ்டம் திடீரென செயல் இழந்தது தெரியவந்தது. உடனே இதுதொடர்பாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து எமர்ஜென்சிங் முறையில் தரை இறக்கத்திற்கான ஏற்பாடுகளை செய்யப்பட்டு வந்தது.
flight passengers
பதற்றமடைந்த பயணிகள்
பயணிகள் அனைவரும் சீட் பெல்ட் அணிந்திருக்க வேண்டும் என்றும் எமர்ஜென்சிங் எக்ஸிட் சரிவர செயல்படுகிறாரா என்பதையும் சரிபார்த்து கொண்டனர். இதனால் பயணிகள் அனைவரும் என்னமோ இதோ என்று பதற்றம் அடைந்தனர். சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதையில் தீயணைப்பு வண்டிகள், மருத்துவக் குழுவினர், மீட்பு படையினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டனர். இதையடுத்து, விமானம் சென்னையில் தரையிறங்க அனுமதி கொடுக்கப்பட்டது.
இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் அலறிய பயணிகள்! 161 பேர் உயிர் தப்பியது எப்படி? பரபரப்பு தகவல்!
pilot
சாதுர்யமாக செயல்பட்ட விமானி
விமானி குறிப்பிட்ட 10 நிமிடத்திற்கு முன்னதாகவே எந்த அசாம்பாவிதம் இல்லாமல் விமானத்தை தரையிறக்கினார். பின்னர் விமானத்தில் இருந்த 314 பயணிகளும் விமானத்திலிருந்து பத்திரமாக கீழே இறங்கினர். இதன் காரணமாக சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.