- Home
- Tamil Nadu News
- சென்னை
- சென்னையில் வாய் புண்ணுக்காக அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை! நடந்தது என்ன?
சென்னையில் வாய் புண்ணுக்காக அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை! நடந்தது என்ன?
சென்னை ராயப்பேட்டையில் உள்ள கிரஸன்ட் மருத்துவமனையில் வாய்ப்புண் சிகிச்சைக்கு சென்ற சிறுவனுக்கு சுன்னத் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கிரஸன்ட் மருத்துவமனையில் வாய்ப்புண் சிகிச்சைக்கு சென்ற சிறுவனுக்கு சுன்னத் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது சென்னை மயிலாப்பூரை சேர்ந்த விஜயலட்சுமி விஜய் ஆனந்தின் தம்பதியின் 9 வயது சிறுவன் வாயில் உள்ள புண்ணிற்கு சிகிச்சை எடுக்க ராயப்பேட்டையில் உள்ள கிரஸன்ட் தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக சிறுவனுக்கு ரத்த பரிசோதனைக்கு பரிந்துரை செய்ததோடு ஓரிரு நாட்களில் அறுவை சிகிச்சை மூலம் வாய்ப்புண் கட்டியை அகற்றுவதாக மருத்துவர் கூறியுள்ளார்.
அறுவை சிகிச்சைக்கான நாளான்று சிறுவனை அழைத்து சென்ற அவரது பெற்றோர்கள் சிறுவனின் வாயில் உள்ள புண்ணை அகற்றுவதாக குறி அறுவை சிகிச்சை அழைத்து சென்றுள்ளனர். அந்த சிறுவனுக்கு மருத்துவரும், செவிலியரும் சிகிச்சை அளித்துள்ளனர். சிகிச்சைக்கு பின்னர் அந்த சிறுவன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அப்போதுதான் அந்த சிறுவனுக்கு உதட்டில் ஏற்பட்ட காயத்துக்காக சுன்னத் அறுவை சிகிச்சை (ஆண் உறுப்பில் ஆபரேஷன்) செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக அறுவை சிகிச்சை செய்தது தொடர்பாக மருத்துவர் முகமது ஓவைசியிடம் சிறுவனின் பெற்றோர்கள் கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு மருத்துவர் மற்றும் தனியார் மருத்துவமனை நிர்வாகமும் உரிய விளக்கத்தை அளிக்கவில்லை. மேலும் தனியார் மருத்துவமனை நிர்வாகத்திற்கு ஆதரவாக ஜமாத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட நபர்கள் சிறுவனின் பெற்றோரிடம் மிரட்டும் தோணியில் பேசியதாக சிறுவனின் பெற்றோர் குற்றம் சாட்டினர். இந்த விவகாரம் தொடர்பாக சென்னை ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. ஆபரேசனுக்கு உறுதுணையாக இருந்த செவிலியரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இதனிடையே இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த மருத்துவமனையில் ஆய்வு நடத்தி அறுவை சிகிச்சை கூட்டத்திற்கு சீல் வைத்துள்ளனர். வாயில் புண்ணுடன் சென்ற சிறுவனுக்கு சுன்னத் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவரை கைது செய்ய வேண்டும் என சிறுவனின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.